பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

9

வண்ணம், வாகனக்கவி, விண்ணப்பம், விருத்தம், வெண்பா), வாழ்க்கை வரலாற்றிலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், திரட்டு நூல்கள், பல்வகை நூல்கள் ஆகிய ஒன்பது வகைகளில் பகுத்தாய்வதாக அமைகிறது.

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு எனும் பகுதியில் இலக்கியப் பருவ இதழ்களில் வெளிவந்த 408 நூல்களுக்கான பதிப்பு வரலாறு எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.

பருவ இதழ்களில் மருத்துவச் சுவடிப்பதிப்புகள் எனும் இறுதிப் பகுதியில் மருத்துவ நூல்களை வெளியிட்ட இதழ்களைப் பற்றியும், அவற்றில் இடம்பெற்ற மருத்துவ நூல்கள் பற்றியும், அவற்றின் பதிப்பு நிலை குறித்தும் ஆராயப் பெற்றுள்ளது.

.

பருவ இதழ்களில் வந்த சுவடிப்பதிப்புகளின் நோக்கும் போக்கும் எனும் பகுதியில் பருவ இதழ்களில் வெளிவந்த சுவடிப்பதிப்புகளின் நோக்கத்தையும் அவற்றின் போக்கையும் ஆராய்வது இப்பகுதியின் முக்கிய நோக்கமாகும். எவ்வெவ் வகைகளிலெல்லாம் பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகள் வெளிவந் திருக்கின்றன என்று ஆராயும் நிலையில் நூற்பெயர் மாற்றம் பெற்றவை, உரைக்குறிப்பால் அறிமுகமானவை, குறைப் பதிப்பை நிறைவு செய்பவை, முதற்பதிப்பு கிட்டாமையால் வெளிவந்தவை, பதிப்புரை பெற்றவை, அறிமுக நோக்கில் வெளிவந்தவை, நூலாசிரியரின் குறைப் பதிப்பை நிறைவு செய்தவை, குறைப்பதிப்பை முழுநூலாகக் கருதியவை, ஒரு நூலின் யாப்பை மாற்றிப் பதிப்பித்தவை, ஒரே நூல் இருவேறு பெயர்களில் வெளிவந்தவை, பாதுகாத்தவரால் நூற்பெயர் சுட்டப்பெற்றவை, மனன நிலையில் உருவானவை, மீண்டும் பருவ இதழில் வெளிவந்தவை, ஏடு பிறழ்ச்சியால் உருவானவை, ஓரிதழில் மூலமும் பிறிதோரிதழில் உரையும் வெளிவந்தவை, பதிப்புக்கு முன் அறிமுகப்படுத்தியவை, தவறான பதிப்பு களைச் சுட்டியவை, முதற் பதிப்பும் மறுபதிப்பும், திருத்தப் பதிப்பு, பல சுவடிப்பதிப்பு, குறைப்பதிப்பு போன்ற வகை