பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

மேலும், பருவ

களில் விரிவாக ஆராயப்பெறுகிறது. இதழ்களில் வெளிவந்த சுவடிப்பதிப்புக்களுக்கான பக்க எண்ணமைப்பு குறித்தும், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகளில் திரட்டு - தொகுப்பு குறித்தும், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு நெறிமுறைகள் குறித்தும் இப்பகுதியில் ஆராயப்பெற்றுள்ளது.

இந்நூல் உருவாவதற்கு முழு காரணமான மாண்புநிறை துணைவேந்தர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும், பருவ இதழ்களில் சுவடிப்பதிப்புகள் என்ற என்னுடைய முனைவர் பட்டத்திற்கு வழிகாட்டியாக இருந்து நெறிப்படுத்திய தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் ஓலைச்சுவடித்துறைத் தலைவர் தெய்வத்திரு பேராசிரியர் முனைவர் த.கோ.பரமசிவம் அவர்களுக்கும், இவ்வாய்வில் திரட்டப்பெற்ற ஏனைய தகவல்களையும் சேர்த்து பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு என்றவொரு நூல் உருவாவதற்கு பல்லாற்றானும் உதவியாக விருந்த ஓலைச்சுவடித்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் வே.இரா.மாதவன் அவர்களுக்கும், இந்நூல் உருவாகுங் காலத்தில் பல உதவிகள் புரிந்த பதிப்புத்துறை இயக்குநர் முனைவர் வை.கண்ணபுரக்கண்ணன் அவர்களுக்கும் என் நெஞ்சான்ற நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தஞ்சாவூர்

27.5.2010

மோ.கோ. கோவைமணி