பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.இதழியல் - ஒரு பார்வை

இதழின் தொடக்கக் காலம் முதல் 19ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் நிலவிய இதழியலும் அதற்கான சட்டங்களும் குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது. தொன்று தொட்டே நம்மிடம் இதழியல் அனுபவம் தோன்றி இருக்கின்றது எனலாம். கூட்டுக் குடும்பமாக மனிதர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள பல்வேறு வகையான உத்திகளைக் கையாண்டுள்ளனர். அதாவது, மனிதன் தன்னுணர்ச்சியின் உந்துதலால் உணர்ச்சியொலியாலும், போலியொலியாலும், குறிப்பொலியாலும், சீழ்க்கையொலியாலும் தன் கருத்தைப். பிறருக்கு அறிவிக்கச் செய்தான். மேலும், பறையறைவித்தும், மணியடித்தும், புகையெழுப்பியும், தீ அம்புகளை வானத்தில் எறிந்தும் ஓரிடத்தில் நடப்பதைச் சுற்றுவட்டாரத்து மக்களுக்கு அறிவிக்கச் செய்தான். இப்படியாக ஆதிமனிதனின் இதழியல் உத்தி இருந்ததை அறிகின்றோம்.

மொழியை உருவாக்கிய மனிதன், அம்மொழியை நிலைநிறுத்த வரிவடித்தைக் கண்டுபிடித்தான். இவ்வரி வடிவத்தைக் கொண்டு பல செய்திகளைக் கல்வெட்டாகவும், செப்பேடாகவும், ஓலைச்சுவடியாகவும் உருவாக்கத் தலைப் பட்டான். இதற்காக எழுது பொருள்களையும் எழுதப்படு பொருள்களையும் கண்டுபிடித்தான். எழுது பொருள்களாகக் கோரைப்புல், களிமண், மூங்கில் பத்தை, பட்டுத்துணி, மரப் பட்டை, பனையோலை, கல், செப்புத் தகடு, தங்கத் தகடு, வெள்ளித் தகடு, தோல் போன்றவற்றையும்; எழுதப்படு பொருள்களாகத் தடித்த கூர்மையான நாணல் குச்சி,