பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

செடிகொடிகளின் இலைச்சாறு, மிருகத்தின் குருதி, கூர்மை யான இரும்புக் கருவி, தங்க ஊசி, வெள்ளி ஊசி, செம்பூசி, தூரிகை, உளி போன்றவற்றையும் கண்டுபிடித்து இருக்கின்றான். இதழியலின் தந்தை

-

"ரோம் நாட்டை ஆண்ட ஜீலியஸ் சீசர் கி.மு. 60இல் அரண்மனைச் செய்திகளை ‘ஆக்டா டைர்னா' (Acta Diurna அன்றாட நடவடிக்கை) என்ற பெயரில் எழுதி பொதுவிடங் களில் வைத்தார். அவர் போரிட்டுக் கொண்டிருந்த பொழுது, போர்ச் செய்திகளைத் தலைநகருக்கு அனுப்பி வைத்தார். இதனால் சீசரை ' இதழியலின் தந்தை' என்று அழைக்கின்றனர். ஆனால், சிலர் சீசருக்கு முன்பே கி.மு.106இல் சிசரோ பிறப்பு- இறப்பு விவரங்களை எழுதித் தனது அரண்மனைக்கு முன்னால் பலரும் பார்க்க அறிவித்தார் என்றும், ஆதலால் அவரையே இதழியலின் முன்னோடியாகக் கருத வேண்டுமென்றும் " (இதழியல் கலை, மேற்கோள், பக்.40-41) குறிப்பிடுவர்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அசோகர் கல்வெட்டுக்களில் தம் ஆணைகளையும் அறிவுரைகளையும், புத்தரின் கொள்கை களையும் பொறித்திருக்கின்றார். எனவே இவற்றினைப் பார்க்கும் போது "இந்திய மாமன்னர் அசோகர் தான் இதழியலின் தந்தை" (இதழியல்,ப.x) என்று சூ. இன்னாசி குறிப்பிடுகின்றார். இவர்களின் கூற்றுகளைப் பார்க்கும் போது உலக இதழியலின் தந்தையாக சிசரோவையும், இந்திய இதழியலின் தந்தையாக மாமன்னர் அசோகரையும் குறிப்பிடலாம்.

இதழியலின் தோற்றுவாய்

கி.பி.105இல் மல்பெரி மரப்பட்டையிலிருந்து சாய்லன் என்ற சீனாக்காரர் முதன் முதலாக காகிதம் செய்வதைக் கண்டுபிடித்தார். உலக மக்கள் காகிதம் செய்யும் கலையைக் கற்றுச் சென்றனர். கி.பி.1041இல் பிசெங் என்ற சீனாக்காரர் களிமண்ணில் எழுத்துக்களைச் செய்து சுட்டு, தகடு சுத்தி, கடினப்படுத்தி, அச்சிடும் முறையைக் கண்டுபிடித்தார். அதன்