பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

எனலாம்.

13

பின்பு அச்சுக் கலையில் ஒரு புரட்சி ஏற்பட்டது எனலாம். கி.பி.1450இல் ஜான் கூடன்பர்க் என்ற ஜெர்மானியர் முதன் முதலில் அச்சுப்பொறியினைக் கண்டுபிடித்தார். காகிதமும் அச்சுப்பொறியும் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு தாள்களின் வழியேயான இதழியலின் வளர்ச்சி தொடங்குகின்றது இந்தியாவில் கி.பி. 1556இல் அச்சுக்கலையின் தோற்றம் பெற்றிருந்தாலும் இதழியலின் தொடக்கம் சற்று தாமதமாகத்தான் தோன்றியிருக்கின்றது. ஏனெனில் இதற்கு ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சியும் தங்கள் மதத்தை மட்டும் பரப்பவேண்டும் என்ற அவாவும் மேலோங்கி நின்றதுமே இதற்குக் காரணம் எனலாம்.

கி.பி. 1768இல் வில்லியம் போல்ட்ஸ் என்னும் ஆங்கி லேயர் செய்தி இதழ் ஒன்றைத் தொடங்குவதற்கு விருப்பம் கொண்டு, கல்கத்தா நகரின் ஓரிடத்தில் "பொது மக்களுக்குக் கல்கத்தா நகரின் செய்திகள் இல்லாதது வணிகத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரிய இழப்பாகும். ஒவ்வொரு இந்திய னுக்கும் அது இன்றியமையாதது. அச்சுத்தொழில் அறிந்த வர்கள், அச்சகத்தை நடத்துபவர்கள் ஆகியோருக்கு நான் ஊக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன்" (தமிழ் இதழியல், ப.25) என்று தட்டி ஒன்றில் எழுதி வைத்தாராம். இதனைக் கண்ட ஆங்கில அரசு வில்லியம் போல்ட்ஸ்சை நாடு கடத்தியிருக் கின்றது. கி.பி.1780வரை இந்தியாவிலிருந்த ஐரோப்பியர்கள் இங்கிலாந்திலிருந்து கப்பல் மூலம் வந்துசேரும் இதழ்களையே நம்பியிருந்தனர். இவ் இதழ்கள் இங்கிலாந்தில் வெளியாகி ஒன்பது முதல் பன்னிரண்டு மாத இடைவெளிக்குப் பிறகே இந்தியா வர நேர்ந்தது. இக்குறையினைப் போக்கும் விதத்தில் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி கி.பி.1780இல் கொல்கத்தாவில் 'பெங்கால் கெசட்டி' என்னும் மாத இதழைத் தொடங்கினார். இவ்விதழ் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

தொடக்க கால இதழின் போக்கு

பெங்கால் கெசட்டி ஆங்கில அரசு அதிகாரிகளின் முறையற்ற செய்திகளைக் கண்டித்து எழுதியது. குறிப்பாக,