பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

இந்தியத் தலைமை ஆளுநர் வாரன்கேஸ்டிங், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி எலிஜா இம்பே ஆகியோரைத் தாக்கி எழுதியது. இதன் காரணமாக இப்பத்திரிகை ஆட்சியாளரின் எதிர்ப்புக்கு உள்ளானது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பெங்கால் கெசட்டில் வெளிவந்த செய்திகளை ஆதாரமாகக் கொண்டு அவ்வரசைச் சாடினர். இதனால் ஜேம்ஸ் அகஸ்டஸ் உறிக்கிக்கு இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரிகள் பல தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கினர். இந்தியாவில் முதல் இதழ் ஆசிரியரே வழக்கு மன்றம், அடிதடி, அச்சுறுத்தல், சிறைச்சாலை, தண்டம், நாடு கடத்தல் ஆகிய கொடுமைகளை எல்லாம் சந்திக்க நேர்ந்தது.

ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் உறிக்கி அவர்கள் அச்சகம் நடத்துவதற்காகவும் இதழ் வெளியிடுவதற்காகவும் காப்பீட்டுத் தொகையாக ரூபாய் எட்டாயிரத்தை ஆங்கில அரசுக்குச் செலுத்தியிருக்கின்றார். ஆங்கில அரசு அதிகாரி . களைப் பழித்து எழுதியமைக்காக ரூ.500 அபராதமும் நான்கு மாத சிறைத் தண்டனையும் பெற்றிருக்கின்றார். சிறைக்குச் சென்றபோதும் உறிக்கி அவர்கள் பெங்கால் கெசட்டைத் தம் போக்கிலேயே வெளியிட்டார். இதனால் மீண்டும் அவருக்கு ஆங்கில அரசு ரூ.5000 அபராதத் தொகை விதித்தது. அப்படியும் அவர் தம் போக்கிலிருந்து மாறாததால் கி.பி. 1782இல் பெங்கால் கெசட் இதழின் அச்சுப்பொறிகளும் எழுத்துக்களும் பறிமுதல் செய்யப்பெற்று அச்சகம் மூடப்பெற்று முத்திரை வைக்கப் பெற்றிருக்கின்றது.

ஹிக்கியின் இதழ் ஆங்கில அரசு அதிகாரிகளின் குறைகளையே சுட்டிக் காட்டியது என்று குற்றம் சாட்டப் பெற்றது. என்றாலும், அவருக்குப் பின் தொடங்கிய ஆங்கி லேயர்களின் இதழ்களும் ஹிக்கியின் போக்கினையே கடை பிடித்தன. கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவாகத்தினர் மற்றும் அதிகாரிகளின் உல்லாச வாழ்க்கையினையும், அவர்களுடைய ஒரு சார்பு போக்கினையும், தங்களைச் சார்ந்து இல்லாதவர்கள் மீது அவர்கள் விடுத்த கொடுமைக் கணைகளையும் வெறுத்த