பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

இச்சட்டத்தை முழுமையாக உணர்ந்து கொண்ட இந்தியர்கள் சமுதாய சீர்திருத்தம், சமய மறுமலர்ச்சி போன்ற சிந்தனையில் ஈடுபட்டு எழுதலாயினர். இதனால் ஆங்கிலேயர் மனங்கோணாததைக் கண்டவர்கள் ஆங்கிலேயரைத் தாக்காமல் தங்கள் மதத்தைப் பற்றியும் சமயத்தைப் பற்றியும் பரப்புவதற்கு இதழ்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். சிலர், ஆங்கிலக் கல்வியைப் பெறுவதிலும் ஆங்கில ஆட்சியியல் பற்றி அறிவதிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் ஆங்கிலேயரை அரவணைத்து இதழ்களை நடத்திச் சென்றிருக்கின்றனர். இன்னும் சிலரிடம் நம்மை ஏன் அவர்கள் ஆளவேண்டும், எங்கிருந்தோ வந்த வர்கள் நம்மைத் தாழ்த்துவதா, காலங்காலமாய் நம்முடைய சமயமாக இருந்துவரும் இந்து சமயத்தையும் அதன் நோக்கங் களையும் அறிவுரைகளையும் வந்தவர்கள் பழிப்பதா என்பன போன்ற எண்ணங்கள் மக்களிடையே உருவாயின. அக்கால இதழ்கள் இக்கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் சென்றன. வெளியாரின் உறவு நீக்கமே நம்மைக் காக்கும் என்னும் கருத்தினை அவை மக்களிடையே படிப்படியாக ஊட்டின. ஆங்கிலேயரை வெளியேற்றிவிட வேண்டும் என்னும் உணர்வின் எல்லைக்கு அவை செல்லவில்லை என்றாலும் தங்களுக்கிடையே உரிமைவேண்டும், தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ள காணவேண்டும் என்று மக்களைத் தூண்டின.

வகை

இந்நிலையில்,

1823 பிரெஞ்சு இந்திய அரசு நிர்வாக ஆவணம்,

புதுவை

1829 சுஜநரஞ்சனி, பெங்களூர்

1831 தமிழ் மேகசின், சென்னை

1832 புனித ஜார்ஜ் கெசட்டு, சென்னை 1833 இராசவிருத்தி போதினி, சென்னை 1835 மெட்ராஸ் கிரானிகல், சென்னை 1835 சத்திய தூதன், சென்னை

1835 மதராசு செர்னல் ஆப் லிட்டரேச்சர் அண்டு சயின்சு, சென்னை