பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

கட்டத்தில் வெளிவந்த இதழ்களின் நோக்கங்களைக் கண்ட ஆங்கில அரசு கி.பி. 1857ஆம் ஆண்டு 'வாய்ப்பூட்டுச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது.

.

இச்சட்டத்தின்படி, "நேராகவோ, மறைபொருளாகவோ, குறிப்பாகவோ, உட்கருத்தாலோ வேறு எந்த விதத்தாலோ சில செயல்களை எழுப்பக்கூடிய எதையும் வெளியிடலாகாது" என்பதால், இந்தியர்கள் எவரும் இதழ்களை உரிமையோடு நடத்தமுடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது. ஆகவே, இந்தியர்களால் அரசியல் இதழ்களை நடத்தமுடியவில்லை. இருப்பினும், சிலர் இலக்கியம் சமயம் - சமூகம் ஆகிய கெடுபிடியற்ற துறைகளில் தங்கள் எண்ணங்களைச் செலுத்தி இதழ்களை நடத்தத் தொடங்கினர். இந்நிலையில்,

-

1860 அமிர்த வசனி, திருச்சிராப்பள்ளி 1860 விவேக சிந்தாமணி, சென்னை 1860 கதா மஞ்சரி, சென்னை

1861 தேசோபகாரி,நெய்யூர்-குமரி மாவட்டம் 1861 சத்திய தீபம், சென்னை

1861 ஜனோபகாரப் பத்திரிகை, கள்ளிக்கோட்டை 1864 தத்துவ போதினி, சென்னை

1865 விவேக விளக்கம், சென்னை

1866 கலாவர்த்தினி, சென்னை

1867 சித்தாந்த ரத்னாகரம், சென்னை

1867 சன்மார்க்க விவேக விருத்தி, வடலூர் 1867 தேசாபிமானி, சென்னை

C

போன்ற இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. கி.பி.1864ஆம் ஆண்டு வெளிவந்த தத்துவபோதினி இதழின் நோக்கம் குறித்து 7.5.1864ஆம் இதழ்ப் பகுதியில் "நாம் நம்முடைய மதம் முழுமையும் கூண்டோடு கைலாசத்துக்குச் செலுத்த அன்னிய மதத்தார் பலவாறாய் முயற்சி செய்யும் இக்காலத்தில் நம்முடைய மதத்தை நிலை நிறுத்துவதற்காக என்னதான் செய்யலாகாது.

நம்முடைய மதத்தில் ஓரெழுத்துந் தெரியாது, தெளிவாய் அச்சிடப்பட்ட கிறிஸ்து மத புஸ்தகங்களைக்