பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

19

கண்டும் பாதிரிகளுடைய ஆதாரமற்ற தூஷணைகளைக் கேட்டுமல்லவோ நம்முடைய சிறுவர்கள் மதிமயங்கிப் போகிறார்கள்.

இச்சமயத்தில் நாம் அசிரத்தையாயிருப்பது நியாயமா, தர்மமா, கடவுளுக்குத்தான் இஷ்டமா?

வேதார்த்தங்களை வெளிப்படுத்துவதற்கு இன்னும் பல ஹேதுக்களுளவாயினும் இது ஒன்றே போதுமானதாய்

இருக்கிறது.

இதுதவிர, நமது தேசத்தாருக்குப் பிரயோஜனமாகும் பொருட்டு, பிரகிருதி சாஸ்திரம், பதார்த்த விக்கியான சாஸ்திரம், ராஜிய தந்திர சாஸ்திரம் முதலிய விஷயங்களில் இங்கிலீஷ் நூல்களின் பொருள்களைக் கூடிய வரையில் சங்கரகித்து, இந்தப் பத்திரிகை மூலமாய் நம்முடைய ஜனங்களுக்குத் தெரிவிக்க நிச்சயித்திருக்கிறோம்.

கடைசியாக நம்முடைய ஏற்பாடுகளிலும் ஆசாரங் களிலும், சாஸ்திரத்திற்கும் யுக்திக்கும் முற்றும் விரோதமாயும், நம்முடைய க்ஷேமத்திற்கும் விருத்திக்கும் ஹானியாயும் உள்ளவைகளைக் குறித்தும் பிரசங்கிக்கப்படும்.

நம்முடைய பாஷையில் வசன காவியமில்லாத குறையையும் கூடிய வரையில் பரிபூர்த்தி செய்ய நாங்கள் நிச்சயித்திருக்கிறோம்.

இந்தப் பத்திரிகையின் ஸ்வரூபத்தையும், உத்தேசி யத்தையும் பிரயோஜனத்தையும், நன்றாய்த் தேர்ந்து, நம்முடை யவர்கள் தகுந்தபடி இதை ஆதரிப்பார்களாகில், இதை பிரகிருதத்தில் யோசித்தவாறு மாதத்துக்கொருதர மாத்திர மின்றி இரண்டு அல்லது மூன்று தரம் பிரசுரம் செய்ய நிச்சயித் திருக்கின்றனம்" என்று பத்திரிகாசிரியர் குறிப்பிடுவதில் இருந்து அக்கால இதழின் போக்கு வெளிப்படுவதைக் காணலாம்.

இவ்விதழைத் தொடர்ந்து கி.பி.1866ஆம் ஆண்டு 'கலா வர்த்தினி' என்னும் இந்து சமய மாத இதழ் சென்னையிலிருந்து