பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

வெளிவந்துள்ளது. இவ்விதழில் இந்து மத சித்தாந்தம், விரத மகிமைகள், புராணம், தர்க்கம், தமிழ் வைத்திய சாஸ்திரம், வான சாஸ்திரம், சங்கப்புலவர் வரலாறு போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் மீண்டும் ஓர் இதழ்ச் சட்டம் கி.பி. 1867ஆம் ஆண்டு கொண்டுவரப் பெற்று உள்ளது. இச்சட்டத்தின்படி அச்சகம் வைத்திருப்பவர் நீதிபதி ஒருவர் முன் உறுதிமொழிப் பத்திரம் கொடுக்கவேண்டும். அச்சக உரிமையாளரும் பதிப்பாளரும் அச்சு வெளியாகும் இடங்களை அரசுக்கு அறிவிக்கவேண்டும். அச்சிட்ட இதழ் களின் இரண்டு படிகளை அரசுக்கு அளிக்கவேண்டும். தவறுகின்றவர்களுக்கு ரூ.2000ம் தண்டம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என்கின்றது. இச்சட்டம் கொண்டு வந்ததற்குப் பிறகு இந்தியர்கள் பலர் அச்சகங் களையும் இதழ்களையும் தொடங்கினர் என்றே சொல்லலாம். 1868 சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புச் சுருக்கம்,

சென்னை

1869 சூரியோதயம்

1870 நேடிவ் பப்ளிக் ஒபினியன் 1870 சத்திய தீபம், சென்னை 1870 சர்வ ஜன மனோரஜ்சனி 1870 பிரம்ம தீபிகை, சென்னை

1870 விவேக விளக்கம், சென்னை

1871 ஆந்திர பாசா சஞ்சீவினி, சென்னை

1871 சுகிர்த வசனி, சென்னை

1871 போலீசு வீக்லி சர்குலர், சென்னை 1871 வர்த்தமான தரங்கிணி, சென்னை

1872 வியவகார தரங்கிணி, சென்னை

1873 தேச பூசணி, சென்னை

1874 திருவாங்கூர் அபிமானி, நாகர்கோவில் 1877 சித்தாந்த சங்கிரகம்

போன்ற பொதுஜன இதழ்களும்,