பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

1868 முதலாயிரம்,சென்னை 1870 மகாபக்த விஜயம், சென்னை 1870 கதா சிந்தாமணி, சென்னை 1872 உண்மை விளக்கம், சென்னை 1876 மச்ச புராணம், சென்னை

1877 வால்மீகி இராமாயண வசனம், சென்னை 1877 திருவாய்மொழி, சென்னை

1877 பராசுர சுமிருதி, சென்னை

21

போன்ற நூலிதழ்களும் வெளிவந்துள்ளன. 1870இல் முதல் மருத்துவ இதழான 'அகத்தியர் வர்த்தமானி' சென்னையில் இருந்து வெளிவந்துள்ளது. சமய இதழ்களாக,

1870 பிரம்ம தீபிகை, சென்னை 1870 விவேக விளக்கம், சென்னை 1870 ஞானபாநு, சென்னை

1877 பழநி தல விநோதம்

போன்றவை வெளிவந்துள்ளன.

இவ்வாறு இந்தியர்கள் பொதுஜன, சமய, மருத்துவ, இலக்கிய இதழ்களை வெளியிட்டு வரலாயினர். கி.பி. 1878ஆம் ஆண்டு 'இந்தியமொழி இதழ்ச்சட்டம்' (The Vernacular Press Act) ஒன்றை லிட்டன்பிரபு அவர்கள் கொண்டுவந்துள்ளார். இச்சட்டத்தின்படி, இதழ்கள் குறிப்பிட்ட தொகையைப் பிணையாகக் (Deposit) கட்டவேண்டும். அரசாங்கத்தின் மீது வெறுப்பு உண்டாகுமாறு எழுதக்கூடாது. இனம், மதம், சாதி இவற்றின் அடிப்படையில் கலவரத்தைத் தூண்டும் முறையில் செய்திகள் வெளியிடக்கூடாது. நீதிபதி அல்லது காவல்துறை அதிகாரியிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும். இவ்விருவருக்கும் இதழ்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் உண்டு. இந்நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு மன்றம் போகமுடியாது. இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு முதலில் எச்சரிக்கையும், மீண்டும் தொடர்ந்தால் பிணையத்