பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

தொகை இழப்பும், அதன் பின்னரும் தொடர்ந்தால் அபராதத் தொகையையோ அல்லது சிறைத்தண்டனையோ விதிக்கப் படும் என்ற கடுமையான சட்டத்தினால் மக்கள் அரசியல் இதழ் நடத்துவதை விட்டுவிட்டு அரசாங்க எதிர்ப்பு இல்லாத துறைகளில் இதழ்களை வெளியிடத் தலைப்பட்டனர். இந்நிலையில்,

1878 மகாபாரத வசனம்

1878 பாகவத புராண வசனம் 1878 குருபரம்பரா பிரபாவம் 1880 மார்க்கண்டேய புராணம் 1880 திருப்பாவை

1880 முதலாயிர வியாக்கியானம் 1881 பரதத்துவப் பிரகாசிகை

1881 தேவாரப் பதிகத் திருமுறைகள் 1881 பெரிய திருமொழி

1882 இயல்பா - முதல் திருவந்தாதி 1882 நாலாயிரதிவ்விய பிரபந்தம் 1882 முதலாயிரம்

1883 பகவத் விஷயம்

1883 நாச்சியார் திருமொழி

1883 திருவிளையாடற் புராணம்

1883 பெரிய புராணம் உரையுடன்

1884 கூர்ம புராணம்

1884 பெரிய புராணம் உரையுடனும் விளக்கங்களுடனும்

போன்ற நூலிதழ்களை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றனர் எனலாம். இதனால் நூல்களை வெளியிட்ட பெருமையையும் இதழ்கள் அடைந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

இப்படியாக ஆங்கில அரசின் அடக்குமுறை இதழியல் சட்டங்களால் மக்களின் உள்ளக்குமுறலில் இருந்த சுதந்திர வேட்கை மறைமுகப் பத்திரிகைகள் மூலம் வெளிப்படலாயின.