பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

23

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களைத் திரட்டும் கருவியாக பல இதழ்கள் தோன்றியிருக்கின்றன. இவ்வாறு உருவான இதழ்களைத் தடுக்க ஆங்கில அரசு பல்வேறு வகையான அடக்குமுறைகளைக் கையாண்டுள்ளது. 'அச்சகங்கள் வைத்திருப்பவர்கள் இதழ்கள் நடத்த முன் வந்தாலோ உதவி செய்தாலோ அவர்களது உடைமைகள் பறிக்கப் படுவதுடன் உயிர்களும் பறிக்கப்படும்" என்று தமக்கெதிராக இதழ் நடத்துபவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

சுதந்திரம் நமது பிறப்புரிமை என்று கொண்ட மக்கள் ஆங்கில அரசுக்குத் தெரியாமல் பல இதழ்களை நடத்தி யுள்ளனர். “பிரிட்டிஷ் ஆதிக்கத்தினால் கடுமையாகச் சுரண் டப்பட்ட ஜமைக்கா மக்கள் தங்களது பத்திரிகைகளை இரக சியமாக உருவாக்கிக் கொண்டனர். இப்படி வெளியான ஜமைக்கா பத்திரிகைகளின் வரலாறு சுவையானது. பகலில் விவசாயிகளாக பணியாற்றுகின்றவர்கள் இரவில் அச்சக ஊழியர்களாக மாறி பத்திரிகைகளை உருவாக்கினர். இப்படி உருவாக்கப்பட்ட பத்திரிகைகளைத் தபால் மூலம் அடுத்த ஊர்களுக்கு அனுப்புவதில்லை. விவசாய காரியங்களுக்காக வெளியூர் செல்பவர்கள் பத்திரிகைகளைக் கொண்டுபோய்க் கொடுப்பார்கள். அவர்கள் படித்த பிறகு அதே பத்திரிகையைப் பக்கத்து ஊருக்கு அனுப்பி வைப்பார்கள். இப்படி ஒரே பத்திரிகை பல ஊர்களுக்குப் பயணம் செய்யும்" (உலகப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும்,ப.100) என்ற ஜமைக்கா மக்களின் போக்கில் இந்திய இதழ்கள் பல மறைமுக மாக வெளிவந்து சுதந்திர வேட்கையைத் தூண்டின எனலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு கி.பி. 1954ஆம் ஆண்டு Delivery of Books Act கொண்டுவரப்பெற்றது. இச்சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள சில முக்கிய நூலகங் களுக்கும் Registrar of Booksக்கும் ஒவ்வொரு படி அனுப்பி வைக்க வேண்டும் என்று விதிக்கப்பெற்றது. இதன்படி கொல்கத்தா நேஷனல் நூலகம், மும்பை மைய நூலகம், சென்னை கன்னிமாரா நூலகம், புதுதில்லி பொதுநூலகம்