பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

மற்றும் அந்தந்த மாநில Registrar of Booksக்கும் அனுப்பிப் பதிவு செய்திடவேண்டும். இச்சட்டத்தின் தொடர்ச்சியாக கி.பி. 2002ஆம் ஆண்டு இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப் பெற்றுள்ளது. அதாவது, மேலே குறிப்பிட்ட ஐந்து இடங்க ளோடு புதுதில்லியிலுள்ள பாராளுமன்ற நூலகத்திற்கும் ஒரு படி அனுப்பிவைக்க வேண்டும் என்று இந்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதழியல் வரலாற்றில் பருவ இதழ்கள்

இதழை 'Journal' என்றும், செய்தியை 'News' என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றோம். சென்னைப் பல்கலைக்கழக 'ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம்' எனும் நூலில் ‘Joumal’யை "நாட்குறிப்புச்சுவடி, அன்றாட நடப்புக் குறிப்பு, தொழிற் கணக்கு முறையில் நாளேடு, செய்தித்தாள், பத்திரிகை, குறிப்புப் புத்தகம்' (ப.552) என்றும்; 'News'யைச் "செய்தி, புதுத்தகவல், புதிய நிகழ்ச்சிகளின் விவரம் (ப.666) என்றும் குறிப்பிடுவதைக் காணும்போது Journal மற்றும் News ஆகிய இரண்டும் செய்தியைக் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

செய்தியை ஆங்கிலத்தில் News என்பதைப் போல் அதற்குச் சொல்லும் விளக்கமும் விசித்திரமாகவே இருக்கிறது. "N - வடக்குத் திசையையும் (North), E - கிழக்குத் திசையையும் (East), W மேற்குத் திசையையும் (West), s -தெற்குத் திசையையும் (South) குறிக்கின்றது. நான்கு திசைகளிலிருந்து வருவதைத்தான் ‘News' என்கின்றனர்" என்பார் பேராசிரியர் சு. சக்திவேல் (இதழியல், ப. II). ஆக, இதழானது நான்கு திசைகளிலிருந்து கிடைக்கக் கூடிய செய்திகளின் பேழை எனலாம்.

இதழியலின் தோற்றம்

தொன்றுதொட்டே நம்மிடம் இதழியல்துறை இருந்து உள்ளது. மனிதனின் தோற்றத்தோடு இவ்வியலும் பிறந்தது எனலாம். கூட்டுவாழ்க்கையில் மனிதன் ஈடுபட்ட காலத்தி லிருந்தே மனிதர்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளத்