பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

25

தொடங்கினர். முதலில் மனிதன் ஓசையெழுப்பிப் பேசுவதற்கு முன்பு செய்கைகளின் மூலம் தம் கருத்தைப் பிறருடன் பரிமாறிக்கொண்டான். அதன் பிறகு சீழ்க்கை ஒலியாலும், பறையறைவித்தும், மணியடித்தும், புகையெழுப்பியும், தீயம்புகளை வானத்தில் எறிந்தும் ஓரிடத்தில் நடப்பதை சுற்று வட்டாரத்து மக்களுக்கு அறிவிக்கும் பழக்கம் தோன்றியது. பின்னர் மனிதன் உணர்ச்சியின் உந்துதலால் தனது குரல் வளத்தைப் பயன்படுத்திச் சிலவகையான ஒலிகளை எழுப்பி னான், உணர்ச்சியொலியாலும், போலியொலியாலும், குறிப் பொலியாலும் தம்கருத்தை வெளிப்படுத்தினான். இம்மூன்று வகை ஒலிகளினால் மனிதனுடைய பேச்சு நாளடைவில் நன்றாகச் சீர்திருத்தி -பண்பட்டு மொழி, எழுத்து வடிவாகத் தோன்றியது.

-

இவ்வாறு உருவான எழுத்து கல்வெட்டாகவும், செப்பேடாகவும், ஓலைச்சுவடியாகவும் உருவாகின. அரசர்கள் தங்களது அறிக்கைகளையும் கட்டளைகளையும் ஓலை, தோல், துணி போன்றவற்றில் குறிக்கச் செய்து தம் குடிமக்களுக்கு அறிவித்தனர். குறிப்பாகத் துணியால் எழுதப்பெற்ற அரசின் செய்திகள் பொதுவிடங்களில் வைத்து மக்களுக்கு அறிவித்தனர். காதலர்கள் தங்கள் அன்பைப் பல வழிகளில் புலப்படுத்தி யுள்ளனர். சான்றாக, மாதவி பிரிந்து சென்ற கோவலனுக்குத் தாழம்பூவின் தோட்டில், முகையாகிய எழுத்தாணியால் செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து மடல் வரைந்து வசந்தமாலையிடமும் மாடலனிடனும் கொடுத் தனுப்பினாள் என்று சிலப்பதிகாரம் (வேனில் காதை, வரி.45- 71) சுட்டும். இம்மடலைத் 'திருமுகம்' என்பர். சகுந்தலை தாமரை இலையின் பின்புறத்தில் நகத்தால் கீறித் தனது காத லுணர்ச்சிகளைத் துஷ்யந்தனுக்குப் புலப்படுத்தினாள் என்று சாகுந்தலம் உணர்த்துகின்றது.

கை

மேலும், பழங்காலத்தில் செய்திகளை எழுதித் தெரிவிப்பதைவிட பறையறைந்து (திருமணம், படையெடுப்புச் செய்திகள்) சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர்.