பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

இதற்கு நம் பழந்தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் இருக்கின்றன. செங்குட்டுவன் சிலைக்குக் கல் எடுக்க இமயமலை செல்ல எத்தனித்தபோது 'அமைச்சன் அழும்பில் வேள்' என்பான்,

"நாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவலர் வஞ்சிக் கடைமுகம் பிரியா; வம்பு அணியானை வேந்தர் ஒற்றே தம்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ? அறைபறை என்றே அழும்பில்வேள் உரைப்ப”

(சிலப்.காட்சிக்., வரி.173-177)

என்று பறையறைந்து வடதிசை செல்வதைச் சொல்லலாம் என்கின்றார். பின் வள்ளுவன் பட்டத்து யானை மீதேறி பறை அறிவித்தான். இதனைச் சிலம்பு,

"இறையிக லியானை யெருத்தத் தேற்றி

அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென்"

(காட்சி, 263-264)

என்கின்றது. அரசுச் செய்திகளை முரசறைந்து அறிவிப்பவனை 'வள்ளுவ முதுமகன்' (பெருங்கதை) என்பர். புனல்நெல்லையும் நெற்கதிரையும் நனைத்த செய்தியைத் துடிமூலம் மற்றவர்க்கு அறிவித்ததைப் பரிபாடல்,

"அகவயல் இளநெல் அரிகால் சூடு

55

தொகுபுனல் பரத்தெனத் துடிபட' (பரி.7:27-28) என்றும், மதம் கொண்ட யானை தெருவில் செல்வதைப் பறையறைந்து தெரிவித்ததைப் பதிற்றுப்பத்து - மூன்றாம்பத்து (22)ம், சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை (46)யும் உணர்த்து கின்றன. முதுகுடிப் பிறந்தோனாகிய வள்ளுவன் யானை மீதேறி ஊரையும் மன்னனையும் வாழ்த்தி முரசறைந்ததை மணிமேகலை, "வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி ஏற்றுரி போர்த்த இடியுறு முழக்கின் கூற்றுக்கண் விளிக்குங் குருதி வேட்கை