பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

முருசுகடிப் படூஉம் முதுகுடிப் பிறந்தோன் திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி வான மும்மாரி பொழிக மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோ னாகுக்"

27

(மணிமேகலை, விழா.27-31)

என்று சுட்டுகின்றது. அதியமான் நெடுமானஞ்சி ஒளவையைத் தூது விட்டதையும் (புறம்.95), பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனிடம் அன்னச் சேவலைத் தூது விட்டதையும் (புறம். 67) காணலாம். மேலும், திருவள்ளுவர் 'தூது' என்ற அதிகாரமே எழுதியுள்ளார். திருவள்ளுவர் 'ஒற்றாடல்' (59) என்னும் அதிகாரத்தில் ஒற்று, ஒற்றர்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.

மேற்காணும் இவைகளெல்லாம் பண்டைக்காலத்துத் தகவல் தொடர்புச் சாதனங்கள் என்றே சொன்னாலும், இவைகளே, இதழியலின் தோற்றமாகத் திகழ்கின்றன. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அசோகர் கல்வெட்டுக்களில் தம் ஆணைகளையும், அறிக்கைகளையும், அறிவுரைகளையும், புத்தரின் கொள்கைகளையும் பொறித்தார். "ரோம் நாட்டை ஆண்ட ஜூலியஸ் சீசர் கி.மு.60இல் அரண்மனைச் செய்திகளை ஆக்டா டைர்னா' என்ற பெயரில் எழுதிப் பொது டங்களில் வைத்தார். அவர் போரிட்டுக் கொண்டிருந்த பொழுது, போர்ச் செய்திகளைத் தலைநகருக்கு அனுப்பிவைத்தார். இதனால் சீசரை 'இதழியலின் தந்தை' என்று அழைக்கின்றனர். ஆனால் சிலர், சீசருக்கு முன்பே கி.மு.106இல் சிசரோ பிறப்பு- இறப்பு விவரங்களை எழுதித் தனது அரண்மனைக்கு முன்னால் பலரும் பார்க்க அறிவித்தாரென்றும், ஆதலால் அவரையே இதழியலின் முன்னோடியாகக் கருதவேண்டுமென்றும் க. குளத்தூரான்

அவர்களின் கருத்தை டாக்டர் மா.பா. குருசாமி அவர்கள் (இதழியல் கலை, பக்.40-41) மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவற்றினைப் பார்க்கும்போது, உலக இதழியலின் தந்தையாக சிசரோவையும், இந்திய இதழியலின் தந்தையாக அசோகரையும் குறிப்பிடலாம்.