பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

அச்சுக்கலையும் இதழ்களின் தோற்றமும்

மொழியை ஏற்படுத்தி, அதனைப் புலப்படுத்த மனிதன் பலவகையான எழுது பொருள்களையும் எழுதப்படு பொருள் களையும் கண்டுபிடித்தான். எழுதப்படு பொருள்களாக கோரைப்புல், களிமண், மூங்கில் பத்தை, பட்டுத்துணி,கல், மரப்பட்டை, பனையோலை, செப்புத்தகடு, தோல், தங்கத் தகடு, வெள்ளித்தகடு போன்றனவும், எழுது பொருள்களாக தடித்த கூர்மையான நாணல் குச்சி, செடிகொடிகளின் சாறு, மிருகத்தின் இரத்தம், கூரான இரும்புக் கருவி, தூரிகை, உளி போன்றனவும் பயன்பட்டுள்ளன.

இவ்வாறு இப்பொருள்களில் பொறிக்கப்பட்டு வந்த செய்திகள் காகிதத்தின் வரவுக்குப் பிறகு இவற்றின் போக்கே மாறிவிட்டது. காகிதத்தின் வரவும் அச்சுப்பொறியின் கண்டு பிடிப்பும் இத்தகவல் சாதனப் போக்கின் திசையை முற்றிலும் மாற்றிவிட்டது. கி.பி. 105இல் மல்பெரி மரப் பட்டையி லிருந்து சாய்லன் என்ற சீனாக்காரர் முதன் முதலாக காகிதம் செய்வதைக் கண்டுபிடித்தார். சீனர்களோடு வாணிபம் செய்த உலக மக்கள் காகிதம் செய்யும் கலையைக் கற்றுச் சென்றனர். கி.பி. 795இல் அரேபியர்கள் பாக்தாத்தில் காகிதம் செய்யும் ஆலை ஒன்றை நிறுவினர்.

அச்சுக்கலையும் முதன்முதலில் சீனாவில் தான் தோன்றியது. அவற்றில் மை தடவித் தாளில் 'அழுத்தி' (press) அச்சிட்டனர். அச்சகத்திற்குப் 'பிரஸ்' என்று பெயர் வந்ததற்கும் இதுவே காரணமாகும். கி.பி. 1041இல் பிசெங் என்ற சீனாக்காரர் களிமண்ணில் எழுத்துக்களைச் செய்து சுட்டு, தகடு சுத்தி, கடினப்படுத்தி, அச்சிடும் முறையைக் கொண்டு வந்தார். அதன்பின்பு அச்சுக் கலையில் புரட்சி ஏற்பட்டது. கி.பி. 1450இல் ஜான் கூடன்பர்க் என்ற ஜெர்மானியர் முதன் முதலில் அச்சுப் பொறியினைக் கண்டுபிடித்தார்.

காகிதமும் அச்சு எந்திரமும் கண்டு பிடிக்கப்பட்ட பின்பு இதழ்களின் வளர்ச்சி தொடங்குகின்றது எனலாம்.