பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

29

ஜெர்மனி நாட்டில் மெயின்ஸ் நகரில் பிறந்த ஜான்கூடன்பர்க் தனித்தனி உலோக அச்சு எழுத்துக்களைக் கண்டுபிடித்த போது அச்சுப்பொறியையும் கண்டுபிடித்தார். அச்சுக் கலையின் தந்தை எனப் போற்றப்படும் அவர் கி.பி.1455இல் 'கீர்த்தனைகள்' என்ற புத்தகம் முழுமைபெற அச்சு எழுத்துக்களைப் பயன் படுத்தினார். இதுவே அச்சில் வெளியான முதல் புத்தகமாகும். உலோக அச்சு, அச்சுப்பொறி, அச்சுப் புத்தகம் ஆகிய மூன்றி னுக்கும் 'ஜான்கூடன்பர்க்' தந்தையாவார். அதன் பின்பு இத்தாலியில் கி.பி. 1465லும், பிரான்சில் கி.பி.1470லும், ஸ்பெயினில் கி.பி.1474லும், இங்கிலாந்தில் கி.பி.1477லும், டென்மார்க்கில் கி.பி. 1482லும், போர்ச்சிகலில் கி.பி.1495லும், ரஷ்யாவில் கி.பி.1553லும் அச்சுக்கலை பரவியது.

இந்தியாவில் கி.பி. 1556ஆம் ஆண்டு கோவாவில் முதலாவது அச்சுக்கூடம் தோன்றியது. இங்குக் கி.பி.1557இல் 'தம்பிரான் வணக்கம்' என்ற தமிழ் நூல் அச்சிடப்பட்டது. இதற்குமுன், கி.பி.1498இல் வாசுகோடகாமா சேர நாட்டில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். கி.பி.1550இல் அம்பலக்காட்டில் திருச்சபை ஒன்றை நிறுவினார். இச்சபையில் பயன்படுத்துவதற்காக கி.பி.1554இல் இலிச்பனில் (போர்த்துக்கல்) 'கார்த்தில்யா' என்ற 38 பக்கத் தமிழ் நூல் ரோமன் எழுத்துக்களில் அச்சாயிற்று. இதுதான் முதல் தமிழ் அச்சுநூல்.

கி.பி. 1577இல் கொல்லத்திற்கு ஓர் அச்சகம் வந்தது. அங்கு கி.பி.1578ஆம் ஆண்டு மீண்டும் 'தம்பிரான் வணக்கம் அச்சானது. கி.பி.1578இல் திருநெல்வேலி புன்னைக்காயலில் ஓர் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது. இங்குத் 'தமிழ் அச்சுத்தந்தை' என்று போற்றப்படும் திருத்தந்தை அண்டிறீக் எழுதி அச்சிட்ட 'அடியார் வணக்கம்' எனும் நூல் கி.பி.1586இல் அச்சானது. அதன்பிறகு கி.பி.1674ஆம் ஆண்டு பம்பாயிலும், கி.பி. 1679ஆம் ஆண்டு கேரளாவிலுள்ள அம்பலக்காட்டிலும் அச்சுக்கூடங்கள் நிறுவப்பட்டன. கி.பி.1712ஆம் ஆண்டு தமிழ்நாடு-தஞ்சை

.