பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

மாவட்டம் - தரங்கம்பாடியில் ஓர் அச்சுக்கூடம் நிறுவப் பட்டது. கி.பி.1713இல் இங்குத் தமிழ் எழுத்துக்கள் வார்க்கப் பட்டன. கி.பி.1715இல் தாள் ஆலையும் நிறுவப்பட்டது. இப்படித் தரங்கம்பாடியில் அச்சு எந்திரம், அச்சு வார்ப்பு, தாள் ஆலை என மூன்றும் ஒருசேர இருந்து இந்தியாவின் அச்சுக் கலைக்கு வித்தாய் அமைந்திருந்தது. சீகன்பால்கு என்ற கிறித்துவத் துறவி 'நற்செய்தி'யை (பைபிள்) முதன் முதலில் தமிழ்ப்படுத்தினார். இந்நூல் கி.பி.1715இல் தரங்கம்பாடியில் அச்சாயிற்று. இந்நூலுக்காகவே அச்சு வார்ப்பாலையும், அச்சுத் தாள் ஆலையும் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இப்படியாக அச்சுக்கலையின் தொடக்க காலத்தில் கிறித்துவ சமயப் பரப்பலுக்கான நூல்களே வெளிவந்துள்ளன. இந்தியாவில் -ஏன் உலக அளவிலும் அச்சகங்கள் தோன்றி, பல ஆண்டுகள் கழித்தே இதழ்கள் தோன்றியுள்ளன. பருவ இதழ்

எனலாம்.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிவருவதைக் கால இதழ்' (Periodical) அல்லது 'பருவ இதழ்' (Magazine) இதனை,"Magazines and Periodicals and bound, paper-covered publications issued regularly. Usually weekly, fort- nightly, monthy or quarterly" (Lexicon Universal Encyclopedia) என்பர். வார இதழ், திங்கள் இருமுறை இதழ், திங்கள் மும்முறை இதழ், திங்களிதழ், இரு திங்களிதழ், முத்திங்களிதழ், நாற்றிங்களிதழ், அரையாண்டிதழ், ஆண்டிதழ் என உறுதி செய்யப்பெற்ற காலங்களில் தொடர்ந்து வெளிவருவதைப் 'பருவ இதழ்' என்று கூறலாம்.

‘சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் சொற் களஞ்சியம்' 'Periodical' என்பதைப் பத்திரிகை, பருவ இதழ் என்று குறிப்பிடுகின்றது. சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூல் நிலைய அரையாண்டு வெளியீட்டிற்கு 'அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழ்' என்றும், தஞ்சை