பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

31

சரஸ்வதிமகால் நூல் நிலைய நாற்றிங்கள் வெளியீட்டிற்குச் 'சரஸ்வதிமகால் நூலகப் பருவ இதழ்' என்றும் குறிப்பிடுவதி லிருந்து 'பருவ இதழ்' என்ற சொல்லானது காலமுறை இதழைச் சுட்டுவது அறியப்பெறுகிறது. எனவே, காலமுறை இதழ்தான் இங்குப் 'பருவ இதழ்' என்று சுட்டப்பெறுகிறது.

ஓலையும் ஏடும் மிகப்பழமையான சொற்கள். புல்லினத்தின் உறுப்புகளைத் தொல்காப்பியர்,

"தோடே மடலே ஓலை என்றா

ஏடே இதழே பாளை என்றா

ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்

புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்”

(தொல். மரபியல், நூ.88)

எனும் நூற்பாவால் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்பன பனை, தெங்கு, கமுகு முதலியவற்றின் இலைகளைக் குறிப்பிடு கின்றன என்கின்றார். இத்தகு ஓலைகளில், ஏடுகளில், மடல்களில் நூல்கள் எழுதப்பெற்றன. ஆதலின் எழுதப்பெற்ற ஓலைகளும் ஏடுகளும் கூட தோடு,மடல்,ஓலை,ஏடு, இதழ் என்றே அழைக்கப்பெற்றன.

“வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு" (சிலப்., 15:58) என்பது எழுதப்பெற்ற ஓலையேட்டையும்,

"பொருவருங் கவிதை யேட்டைப் போற்றிமுன்" (திருவிளை. கிழியறுத்த படலம், பா.11)

என்பது கவிதை எழுதப்பெற்ற ஓலையேட்டையும்,

“நீடுமெய்ப் பொருளின் உண்மை நிலைபெறுந் தன்மை யெல்லாம்

ஏடுற வெழுதி”

(திருத்தொண்டர் புராணம் திருஞான., பா.796)

என்பது எழுதவிருக்கும் ஏட்டையும்,

“ஏட்டுப்பொறி நீக்கி, மெல்லென விரித்து”

.

(Qugiama, 4:10:109-110)