பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

"இறைவரும் கைவிடார் ஏடவர்பால் சென்ற பிறரும் அறிந்து இன்பம் பெறலால்"

(முதுமொழி மேல்வைப்பு,பா.69)

"ஆற்றல ழியுமென் றந்தணர்க ணான்மறையைப் போற்றியரைத் தேட்டின் புறத்தெழுதா ரேட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல்சோர் வின்று"

(திருவள்ளுவமாலை, பா.15)

“வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு”

(மனோன்மணீயம்,4:29)

போன்றன எழுதிய ஓலையையும் சுட்டுதல் காணலாம். பழங்காலத்தில் ஏடு, ஓலை, இதழ் என்று வழங்கி வந்தவை இன்று இதழாகக் காணப்படுகின்றன. இதழை ‘Journal' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம் 'Journal'லை நாளேடு, செய்தித்தாள், பத்திரிகை என்கின்றது.

பருவம் என்னும் சொல் காலத்தைக் குறிக்கும். இதற்குப் பழந்தமிழ் இலக்கியத்தில் பல சான்றுகள் மண்டிக் கிடக்கின்றன. அவற்றுள் சில,

"இவை பாராட்டிய பருவமு முளவே" (அகம்.26:11)

என்பது காலத்தையும்,

"ஆதவம் பனிமழை யனிலத் தச்சுறாப்

பாதவ மாமெனப் பருவ மாறினும்

பேதைபங் குடையவெம் பிரானை யுன்னியே

மாதவம் புரிந்தனன் மதலை வேண்டியே"

(கந்த., அசுர. மார்க்கண்., பா.176)

என்பது ஓராண்டுக்குண்டான கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் ஆகிய ஆறு காலங்களையும்,