பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

33

"காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண முன்னி ஆசற நடக்கு நாளு ளைங்கணைக் கிழவன் வைகிப் பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவஞ் செய்தான்" (சீவக. பா.851)

என்பது ஆண்டுக்குண்டான பன்னிரண்டு திங்களில் ஒன்றான பங்குனித் திங்களைப் பங்குனிப் பருவம் என்று கூறியதால் பருவம் என்பது திங்க(மாதம்)ளாவதையும்,

“கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெரும்செல்வம், இல்லத்து உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான் துய்க்கப் படும்"

என்பது தக்க காலத்தையும்,

(நாலடி.பா.274)

"பருவமொ ராயிரந் தீர” (கம்ப. அகலி.,பா.28) என்பது ஆண்டையும் குறிப்பதாக இலக்கியங்கள் குறிப்பிடு கின்றன. ஆகப் பருவம் என்பது காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவு. இன்று தாளில் எழுதப்பெற்று அல்லது அச்சடிக்கப்பெற்று ஒரு குறிப்பிட்ட கால இடை வெளியில் வெளிவருவதை ஏடு என்றும், இதழ் என்றும் அழைக்கின்றனர். அதாவது, நாளேடு, வாரயேடு, திங்களேடு என்பன நாளிதழ், வார இதழ், திங்ளிதழ் என்றழைக்கப் படுவதால் அறியலாம். பழங்காலத்தில் எழுதப்பெற்று ஏடாகக் குறிப்பிட்டதை இன்று அச்சடித்த இதழாகவும் நூலாகவும் கருதுகின்றனர்.

உலகப் பருவ இதழ்கள்

கி.பி. 1480ஆம் ஆண்டிலேயே ஆஸ்திரியாவில் அச்சகங்கள் இயங்கத் தொடங்கிவிட்ட போதிலும் லைனர்ஜெய்டாஸ் என்ற வார இதழ் கி.பி.1605ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதுவே, உலகத்தின் முதல் வார இதழாகும். இவ்விதழ் கி.பி.1714ஆம் ஆண்டில் வளர்ச்சியுற்று நாளிதழாக