பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

லைபிரியா ஹெரால்டு - 1826 (லைபீரியா)

அல்வாகேயி

-

1830 (எகிப்து)

லேசர்ஜில் - 1831 (மொரீஷயஸ்) கெஜட்டி -1870 (மடகாஸ்கர்)

ரொடிஷியா ஹெரால்ட் -1891 (ஜிம்பாப்வே) அப்பிரிக்கன்ஸ்டாண்டர்ட் - 1902 (உகாண்டா) லொராஸ்கே மார்கிஸ் ஹார்டியல் - 1905 (மோசாம்பில்) லிவின்ங்ஸ்டோன் மெயில் - 1906 (ஜாம்பியா)

என அமைந்திருக்கக் காணலாம். இவைகளைப் பார்க்கும் போது உலக நாடுகளிலேயே இதழ்களின் தொடக்கமாக கி.பி.1605இல் வெளியான லைனர்ஜெய்டாஸ் (ஆஸ்திரியா) மற்றும் நியுவிடிச் டிஸ்ஷெரி (பெல்ஜியம்) ஆகிய இரண்டு வார இதழ்களைத் தான் குறிப்பிட முடிகிறது. எனவே, உலக இதழியல் வரலாற்றில் நாளிதழ், வார இதழ், மாதம் இருமுறை மற்றும் மும்முறை இதழ், மாத இதழ், முத்திங்களிதழ், நாற்றிங்களிதழ், அரையாண்டிதழ், ஆண்டிதழ் ஆகியவைகளில் வார இதழே முதன் முதலில் வெளிவந்த பெருமையைப் பெறுகிறது.

இந்தியப் பருவ இதழ்கள்

ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது இந்தியாவின் தலைநகராய் இருந்த கல்கத்தாவில் கி.பி.1780 சனவரி 29ஆம் நாளன்று ஜேம்ஸ் அகஸ்டஸ் இக்கே என்னும் ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் 'வங்காள கெசட்' என்ற முதல் வார இதழ் தொடங்கினார். இதுவே, இந்தியாவில் முதல் இதழுமாகும். இந்தியாவில் முதல் இதழ் ஆங்கிலத்தில்தான் வெளிவந்து உள்ளது.

அதுபோல் இந்திய மொழிகளில் வங்கமொழியில் தான் முதல் இதழ் வெளிவந்துள்ளது என்பர் இதழியலாளர்கள். ஆனால், அ.மா.சாமி அவர்கள், "இந்திய இதழியல் வரலாற்றைக் கல்கத்தாவில் இருந்து தொடங்குவார்கள். அதற்குக் காரணம், அன்று கல்கத்தா இந்தியாவின் தலைநகராக விளங்கியது. அங்கேதான் இந்தியாவின் முதல் இதழும் முளைவிட்டது.