பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

37

அங்கே வாழ்ந்த ஆங்கிலேயர்தான் முதன்முதல் இந்திய இதழியல் வரலாற்றை எழுதி வைத்தார்கள். இந்தியர்களும் இன்றுவரை அதை அப்படியே பின்பற்றிக்கொண்டு இருக்கி றார்களே தவிர, தாங்களாகச் சொந்தமாக ஓர் இதழியல் வரலாறு எழுதவேயில்லை. உண்மையில் இந்திய இதழியல் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படவேண்டும். அச்சு இதழ்கள் தோன்றி வளர அச்சகங்களே அடிப்படை. இந்திய மொழிகளில் முதன் முதல் அச்சுக்கண்டமொழி தமிழே' (19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள், ப.13) என்கிறார். இவரின் கருத்து ஆராயப்படவேண்டிய ஒன்றுதான். மேலும், இவர் இந்தியாவிலேயே தமிழ் மொழியில் தான் முதல் இதழ் தோன்றி இருக்கின்றது என்றும் வாதிடுகின்றார். இவரின் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது.

""

இந்திய மொழிகளின் முதல் இதழ்களைக் கால நிரல்படுத்திக் காண்போம்.

J

மாசத் தினச் சரிதை 1812 (தமிழ்) சமாச்சார் தர்பன் - 1818 (வங்காளம்) திக் தர்சன் -1818 (வங்காளம்)

மும்பாய்னா சமாச்சார் - 1822 (குஜராத்தி) மீரட் -அல்-அக்பர் - 1822 (உருது)

ஊதந்த் மார்டண்டு 1826 (இந்தி-தேவநாகரி பம்பாய் தர்பன் - 1832 (மராத்தி)

சத்தியதூதன் - 1835 (தெலுங்கு)

விஞ்ஞான நிஷேபம் -1840 (மலையாளம்)

அருணோதயா - 1846 (அசாமி

கர்னாடிக் பிரகாசிகா - 1865 (கன்னடம்)

அக்பர் தர்பார் சாகிப் - 1867 (பஞ்சாபி) ஆஷா -1925 (ஒரியா)

என அமைவதைக் காணலாம்.

தமிழ்ப் பருவ இதழ்கள்

தமிழ்மொழியில் கி.பி. 1554இல் 'கார்த்தில்யா' என்னும் அச்சுநூல் உருவாகி ஏறக்குறைய 250 ஆண்டுகள் கழிந்த