பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

பின்னரே இதழ்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. கி.பி.1802 இல் 'சிலோன் கெசட்' என்னும் மும்மொழி (தமிழ்,சிங்களம், ஆங்கிலம்) இதழில் 'அரசாங்க வர்த்தமானி' என்ற தனிப் பெயருடன் தமிழ் இடம்பெற்றுள்ளது. இவ்விதழின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு கட்டுரை அல்லது செய்தியும் மூன்று மொழிகளிலும் வெளியாகும். மூன்று மொழிகளில் ஏதாவது ஒன்றைத் தெரிந்தவர்கள் அந்தப் பத்திரிகையைப் படிக்கலாம்.

ஜான்மர்டாக்(கி.பி.1819-1904) அவர்கள் தொகுத்த 'தமிழ் அச்சு நூல்களின் பட்டியல்' என்னும் நூலை அவரது காலத்திலேயே 1865ஆம் ஆண்டு அச்சிட்டு வெளிப்படுத்தினார். இந்நூலில், 'பருவ இதழ்கள் - செய்தித்தாள்கள்' என்ற பகுதியில் அக்காலத்தில் வெளிவந்த 12 இதழ்களைப் பற்றிக் குறிப்பிடு கின்றார். இப்பன்னிரண்டு இதழ்களில் பத்து இதழ்கள் கிறித்துவச் சமயத்தைச் சார்ந்ததாகவும் மற்ற இரண்டு இதழ்கள் பிரம்மஞான இயக்கத்தைச் சார்ந்ததாகவும் இருக்கின்றன. இப்பட்டியல் முழுமையானதாக இருக்க முடியாது என்கிறார் அ. மா.சாமி."மர்டாக் தமிழில் அதிகப் புலமை இல்லாதவர். (இலங்கையில் கூட சிங்கள இதழ்தான் நடத்தினார்) இவரது தமிழறிவு மிகவும் குறைவு என்பது நூலின் முன்னுரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மற்ற இதழ்களைப் படிக்க அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. கிறித்துவக் கல்விக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் கிறித்துவ இதழ்கள் அனைத்தும் மர்டாக்கின் பார்வைக்கு வந்திருக்கக் கூடும். மற்ற இதழ்களை அவர் பார்த்ததாகவே தெரியவில்லை. நமக்குத் தெரிந்து 1831 1865 ஆண்டுகளுக்கு இடையே இருபதுக்கு மேற்பட்ட இதழ்கள் (கிறித்துவ சமயத்தைச் சாராதவை) வெளிவந்தும், அவை பற்றி மர்டாக் குறிப்பிடாததற்கு இதுதான் காரணமாக இருக்கும்" (19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள், ப.26) என்னும் இவரின் கூற்று தமிழில் வெளிவந்த இவரது இதழ்களின் பட்டியலைக் காணும்போது உண்மையென்றே தோன்றுகிறது.

-