பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

இதழ்கள் தோன்றிய காலந்தொட்டு இதழ்களின் பெயரில் அச்சகங்கள் நிறுவப்பட்டு வந்துள்ளன என்பது வரலாற்று உண்மை. அதாவது அத்தினீயம் அண்டு டெய்லி நியூஸ் பிரஸ், இந்து பிரஸ், கல்வி விளக்க அச்சுக்கூடம், சுதேசமித்திரன் அச்சுக்கூடம், ஞானரத்னாகரம் அச்சுக்கூடம், ஞானபானு அச்சுக்கூடம், திராவிட வர்த்தமானி அச்சுக்கூடம், வித்தியா ரத்னாகரம் பிரஸ், மெய்ஞ்ஞான விளக்கம் அச்சுக்கூடம், வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், விவேக கலாநிதி பிரஸ், விவேக சந்திரோதயம் அச்சுக்கூடம், அத்வைத விளக்கம் என்னும் அச்சுக்கூடம் போன்ற பல இதழ்களின் பெயர்களில் அமைந்த அச்சுக்கூடங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இக்கூற்றின்படி, 'மாசத் தினச் சரிதை' என்ற மாத இதழும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்திருக்க வேண்டும். திருக்குறள் இவ்வச்சகத்தின் வழியே கி.பி.1812இல் வெளியிடப்பட்டிருப்பதற்கு நூல் ஆதாரம் கிடைத்திருக் கின்றது. இந்நூல் தோன்றிய கி.பி. 1812ஆம் ஆண்டையே 'மாசத்தினச் சரிதை' மாத இதழின் ஆண்டாகக் கொள்ளப்பட் டிருப்பது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. அச்சுக்கூடங்களின் வரலாற்றைப் பார்க்கும்போது முதலில் பிரச்சாரத் துண்டு அறிக்கைகளும் அரசின் ஆணைகளுமே வெளியிட்டுப் பிறகு பல மாத/ஆண்டுகளின் முயற்சியால் நூல்களை உருவாக்கியுள்ளனர். உலக நாடுகளில் அச்சுக் கலையின் வளர்ச்சியையொட்டியே செய்தி வெளியீடுகள் துண்டுப் பிரசுரங்களாக அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன" என்கிறார் மு.அ. முகம்மது உசேன் (தமிழ் இதழியல், ப.19). கி.பி.1455இல் 'கீர்த்தனைகள்' என்ற உபவாசப் பத்திரிகையை ஜான்கூடன்பர்க் வெளியிட்டார். இதுவொரு துண்டுப் பிரசுரமாகும். இது 13 பக்கங்களைக் கொண்டது. இதன்பிறகு பல துண்டுப் பிரசுரங்கள் வெளிவந்து சேமிப்பாரின்றி அழிந்திருக்கலாம். முன்னர்க் குறிப்பிட்டதுபோல் 1455, 1465, 1470, 1474, 1477, 1482,1495,