பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

41

1553, 1556 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் அச்சகங்கள் நிறுவப்பட்டன. இவ்வச்சகங்களின் பணி எதுவுமே நமக்கு முழுமையாகத் தெரியவில்லை. சேமிப்பதற்கு ஏதுவில்லாத கிறித்துவ சமயப் பரப்புத் துண்டுப் பிரசுரங்களை இவ்வச்சகங்கள் வெளியிட்டிருக்கலாம்.

கட்டடம் செய்யப்பெற்ற நூல்கள் உலகின் ஏதோ வொரு மூலையில் கிடைப்பதால் அதனைக் கொண்டு அவ்வவற்றின் வரலாற்றைக் கணிக்கின்றோம். ஒரு அச்சகம் நூல்களை மட்டும் வெளியிடுவனவாக இருந்திருக்க முடியாது. நூல்களை வெளியிடுவது அவ்வச்சகத் தொழில்களில் ஒன்றாகவே இருந்திருக்கின்றது. ஒரு அச்சகத்தின் துணைத் தொழிலான நூல்வெளியீட்டைக் கொண்டு அவ்வச்சகம் நூல் வெளியிட்ட ஆண்டில் தோன்றியது என்று ஆணித்தரமாகக் கூறமுடியாது. இவ்வச்சகம் நூல்களை வெளியிடுவதற்கு முன் பல ஆண்டுகள் அச்சுத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். அனுபவமுள்ள அச்சுக்கூடத்தில் தான் நூல்கள் அச்சிடக் கொடுப்பது வழக்கம். 1812இல் வெளியான 'திருக்குறள்- மூலபாடம் தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் சென்னையில் உள்ள 'மாசத்தினச்சரிதை' அச்சுக் கூடத்தில் ஏன் அச்சிட்டிருக்கிறார். அக்காலத்தில் இவ்வச்சுக்கூடம் 'மாசத்தினச்சரிதை' என்னும் மாத இதழைத் திறம்பட நடத்தி வந்திருக்கவேண்டும். இதனைக் கண்ட ஞானப்பிரகாசம் இவ்வச்சகத்தில் அச்சிட்டிருக்கவேண்டும் என்பதே உண்மை. எனவே, அனுபவமிக்க அச்சகமாக மாசத் தினச்சரிதை அச்சுக் கூடத்தை கருதிப் பார்ப்பின் இவ்வச்சுக்கூடம் கி.பி.1812க்கும் முன்னரே 'மாசத்தினச்சரிதை' எனும் மாத இதழ் தமிழகத்தில் முதன் முதலில் வெளிவந்திருக்கக் கூடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வார இதழ்கள்

வாரம், அதாவது ஏழு நாள்களுக்கு ஒருமுறை வெளி வரும் இதழை 'வார இதழ்' எனலாம். இவ்வகை இதழ்களில்