பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரன்று

இலக்கியம், தத்துவம், கலை, தொழில், திரைப்படம், அரசியல், கல்வி, பொருளாதாரம், விளையாட்டு, நூல் மதிப்புரை, கோவில் வரலாறு ஆகியன பற்றிய கருத்துகள் செய்திகளாக வெளிவரும். மேலும், செய்திகளுக்கு இடையே நகைச்சுவைத் துணுக்கு களும், ஓவியர்கள் வரையும் வரைபடங்களும் வெளிவரும். திங்கள் இருமுறை மற்றும் மும்முறை இதழ்கள்

பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை வெளிவரும் இதழைத் 'திங்கள் இருமுறை இதழ்' என்றும், பத்து நாள்களுக்கு ஒருமுறை வெளிவரும் இதழைத் 'திங்கள் மும்முறை இதழ்' என்றும் கூறலாம். வார இதழிற்கும் திங்கள் இதழிற்குமிடையே இவ்விரு இதழ்களும் பாலமாக ருந்துவருகின்றன. வார இதழில் செய்திகளும் கருத்துகளும் இடம்பெறுகின்றன. ஆனால் திங்கள் இருமுறை மற்றும் மும்முறை இதழ்களில் கருத்துகள் ஆராய்ச்சிப் பின்னணியுடன் ஆழமாகவும் நுணுக்கமாகவும் ஆய்வு நடத்தப்பெற்று இவ்வகையான இதழ்களில் பெரும்பாலும் அரசியல், சமூகம், சமயம் பற்றிய செய்திகளே ஆராயப்பெற்றுள்ளன.

வெளியிடப்பெறுகின்றன.

திங்களிதழ்கள்

திங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இதழைத் 'திங்களிதழ்' எனலாம். ஒரு குறிப்பிட்ட செய்தியைத் தெளி வாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் உணர்த்தத் திங்களிதழ் பயன்படுகின்றது. சிறுகதை, குறுநாவல், இலக்கிய ஆய்வு, இலக்கிய நூல்கள் ஆகியவற்றை வெளியிடத் திங்களிதழ்தான் பொருத்தமானதாகக் கருதப்பெறுகிறது. தத்துவம்,நிதி, ஆராய்ச்சி, விளையாட்டு, இலக்கியம் ஆகிய துறைகளுக்கும் திங்களிதழ் பெரிதும் உதவி செய்கின்றது. அறிவியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள், குழந்தை களுக்கான கதைகள், வேடிக்கைப் படங்கள் போன்றவற்றையும் திங்க ளிதழ்கள் வெளிப்படுத்துகின்றன. இதழியல் வரலாற்றில் பருவ இதழ்களில் அதிகமாக இடம்பெறுவன திங்களிதழ்களே.