பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர்ம.இராசேந்திரன்

துணைவேந்தர்

அணிந்துரை

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-613010

நாள் 03-06-2010

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கும் மேலான வழிகாட்டுதலுக்குமிணங்க 2010 சூன் 23-27ஆம் நாட்களில் கோவையில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைத் தமிழுலகம் மகிழ்ச்சியோடு வரவேற்றுப் போற்றுகிறது. உலகமெலாம் தமிழோசை பரவிடவும் தமிழர்தம் தொன்மையும் சிறப்பும் வெளிப்படவும் இம்மாநாடு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. இம்மாநாட்டு ஆய்வரங்குகளில் உள்நாட்டு. வெளிநாட்டு அறிஞர்கள் ஓராயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஐம்பத்தைந்து வகைப்பாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கவுள்ளனர்,

30*

இம்மாபெரும் ஆய்வரங்க நிகழ்ச்சிகளை அமைத்து, ஒருங்கிணைத்து நடத்தும் பெரும் பொறுப்பினை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளித்துள்ளார்கள். தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்பொறுப்பினை மனமுவந்து ஏற்று அல்லும் பகலும் அயராது பணியாற்றி வருகிறது. மாநாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஆய்வரங்கங்களின் பணிப் பொறுப்பினைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு அளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.