பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

இவ்வாறான வார இதழ், திங்கள் இருமுறை இதழ், திங்கள் மும்முறை இதழ், திங்களிதழ், முத்திங்களிதழ், நாற்றிங்களிதழ், அரையாண்டிதழ், ஆண்டிதழ் போன்ற பருவ இதழ்களில் பல்வேறு வகையான உள்ளடக்கங்கள் உள்ளன. குறிப்பாக, சிறுவர்களுக்கான சிறுவர் இதழ்கள், மகளிர்க்கான மகளிர் இதழ்கள், பருவ வயதினர்க்கான இதழ்கள், ஆன்மிக இதழ்கள் எனப் பாகுபடுத்திய நிலையில் பல்வேறு இதழ்கள் வெளிவருகின்றன. இவையல்லாமல் அயல்நாடுகளில் தமிழ் இதழ், அரசியலிதழ், அறிவியலிதழ், ஆய்வு இதழ், இணைய இதழ், இயக்க இதழ்கள் (தனித்தமிழ் இயக்க இதழ், தேசிய இயக்க இதழ், பகுத்தறிவு இயக்க இதழ்), இலக்கிய இதழ், உள்நாடு பற்றிய இதழ், எழுத்தாளர் இதழ், கட்சி இதழ்கள் (காங்கிரஸ் இதழ், கம்யூனிஸ்ட் இதழ், தி.க. இதழ், தி.மு.க. இதழ், தமிழரசுக்கழக இதழ், அ.இ.அ.தி.மு.க. இதழ், ம.தி.மு.க. இதழ், பா.ம.க. இதழ்), கணினி இதழ், கதை இதழ், கலை இதழ், கல்வி இதழ், கல்வெட்டியல் இதழ், கவிதை இதழ், கால்நடை அறிவியல் இதழ், கிராமநல இதழ், கூட்டுறவு இதழ், சட்ட இதழ், சமய இதழ்கள் (இந்து சமய இதழ், இஸ்லாமிய இதழ், கிறிஸ்தவ இதழ், சமண இதழ்), சமூக இதழ், சர்வோதய இதழ், செய்தி இதழ், செய்தித் துணுக்கு இதழ், சோதிட இதழ், தகவல் இதழ், தமிழாய்வு பற்றிய ஆங்கில இதழ், தனிச்சுற்று இதழ், திரைப்பட இதழ், தொகுப்பு இதழ், தொழில் இதழ், தொழிற்சங்க இதழ், நாடக இதழ், நாட்டு நிர்வாக இதழ், நாட்டுப்புறவியல் இதழ், நூலக இதழ், நூலிதழ், பயண இதழ், பன்மொழி இதழ், பாலுணர்வு இதழ், பிற மாநிலங்களில் தமிழிதழ், பொறியியல் இதழ், மதுவிலக்கு இதழ், மருத்துவ இதழ், மொழியியல் இதழ், வணிக இதழ், விகட இதழ், விளையாட்டு இதழ், வெளிநாடு பற்றிய இதழ், வேளாண்மை இதழ் எனப் பல வகைகளில் இதழ்கள் வெளிவருகின்றன.

இலக்கியப் பருவ இதழ்கள்

இவ்வகையான பருவ இதழ்களில் ஒன்றே 'இலக்கியப் தமிழிலக்கணம்

பருவ இதழ்'. இதில் தமிழிலக்கியம்

J