பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

45.

தொடர்பான ஆய்வுகள், விவாதங்கள், நூல்கள், உரைகள், வினா- விடைகள், பொதுக்கட்டுரைகள், சொல்லாராய்ச்சிகள், நூலாராய்ச்சிகள், தமிழ் மற்றும் தமிழ்ப்புலவர் வரலாறுகள், தமிழ்ப் பாடங்கள், மொழிபெயர்ப்புகள் மற்றும் மொழிபெயர்ப்பு குறித்த கட்டுரைகள், தமிழையும் தமிழிலக்கியத்தையும் மேம்படுத்தும் வகையிலமையும் கருத்துக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. இவ்விலக்கியப் பருவ இதழ்களை நூல்கள் வெளி யிட்ட பருவ இதழ், நூல்கள் வெளியிடாத பருவ இதழ் எனப் பிரிக்கலாம். மேலும், நூல்கள் வெளியிட்ட பருவ இதழ் களைச் சுவடிப்பதிப்புகள் வெளியிட்ட பருவ இதழ், நிகழ்கால ஆசிரியர்தம் நூல்கள் வெளியிட்ட பருவ இதழ் எனப் பிரிக்கலாம்.

சுவடிப்பதிப்புகள் வெளியிட்டதாக அறியத்தக்க பருவ இதழ்கள் தமிழகத்தில் பல வெளிவந்திருக்கின்றன. அவ்விதழ் களைப் பார்வையிட முடியவில்லை. என்றாலும் அங்கங்குக் காணும் குறிப்புகளால் அபிநவப் பத்திரிகை, அமிர்த வசனி, அருள் ஒளி, அழகேசன், ஆனந்தபோதினி, இந்து சமயச் செய்தி, கம்ப நாடர், கலாநிதி, கலாவல்லி, காமகோடி, குமரன், கொங்கு, சமய ஞானம், சாந்தி, சித்தாந்த ஞான போதம், சில்பஸ்ரீ, செந்தமிழ்ப்பானு, சைவம், ஞான அரசு, தமிழகம், தமிழர், திருநாவுக்கரசு, தருமசீலன், திருவிளக்கு, வித்தியாபாநு, விவேக சிந்தாமணி, விவேக தீபிகை, ஸ்ரீ வைஷ்ணவன் போன்ற பருவ இதழ்கள் சுவடிப்பதிப்புகளை வெளியிட்டதாக அறியமுடிகிறது.

உலக - இந்திய - தமிழக இதழியல் வரலாற்றில் பருவ இதழே முதன் முதலாக வெளிவந்திருக்கின்றது என்பது இதழியல் வரலாற்றுண்மை. தொடக்கக் காலந் தொடங்கித் தமிழில் வெளிவந்த இதழ்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்காய் இருக்க இவற்றின் உள்ளடக்கம் மட்டும் ஏறக்குறைய எழுபத்தைந்து வகைகளாக இருக்கின்றன. இவற்றில் ஒன்றாகத் தமிழிலக்கிய இதழ்கள் உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் வெளிவந்திருக் கின்றன. குறிப்பாக, இலங்கையில் இளம்பிறை (1964), கலாநிதி