பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.

(1929, 1948), கலைமகள் (1925), சிவதொண்டன் (1936), தமிழாநந்த போதினி, மெய்கண்டான் (1923); இராங்கியத்தில் ஞானப்பழம் (1975), இரங்கூனில் அன்பு (1927), வேதம் (1926) போன்ற அயல்நாட்டிதழ்களும்; கேரளாவில் அறிவு விளக்கம் (1901), தமிழன் (1912), ப்ராசீன கைரளி; கர்னாடகாவில் குறள் மலர் (1965); புதுவையில் கலைமகள் (1913), தமிழ் மகவு (1917); ஆந்திர மாநிலத்தில் Tirumala Tirupathi Devasthanams Builletin (1950), Journal of the Srivenkateswara Oriental Institute (1940) போன்ற அண்டை மாநில இதழ்களும் குறிப்பிடத்தக்கன.

இவ்வகையில் 36 பருவ இதழ்கள் தெரிவுசெய்யப் பெற்றன. அவை தனியார் பருவ இதழ்கள் 11, தமிழ்ச்சங்கப் பருவ இதழ்கள் 3, சுவடி நூலகப் பருவ இதழ்கள் 2, ஆதீனப் பருவ இதழ்கள் 7, நிறுவனப் பருவ இதழ்கள் 10, பல்கலைக் கழகப் பருவ இதழ்கள் 3 ஆகியவையாகும்.

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பின் தொடக்கக் காலம் A..1897 6760TQUITLO. எனவே, கி.பி.1897 முதல் கி.பி.2000 வரை வெளிவந்த 36 இலக்கியப் பருவ இதழ்களில் இதுவரை 406 சுவடிப்பதிப்புகள் கிடைத்துள்ளன. இதழ்களைத் தேடுவது என்பது பெரும்பணி. இருப்பினும் புகழ்பெற்ற சில நூலகங்களில் இப்பொழுது (1996-2000) கிடைக்கக் கூடிய இலக்கியப் பருவ இதழ்களை மட்டும் பார்வையிட்டு அவற்றில் கிடைத்த சுவடிப்பதிப்பு நூல்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. இது 50 விழுக்காடு என்றே சொல்லலாம். ஏறக்குறைய 2500 வகையான பருவ இதழ்களைப் பார்வையிட்டதில் 36 இலக்கியப் பருவ இதழ்கள் மட்டுமே சுவடிப்பதிப்புகளை வெளியிட்டதாக அறியமுடிகிறது.

இப்பருவ இதழ்களில் பெரும்பாலானவை இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்தன. என்றாலும், இந்திய விடுதலைக்குப் பின் சில நிறுவன வெளியீட்டுப் பருவ இதழ் களில் சுவடிப்பதிப்பு நூல்களை மிகுதியாகக் காணமுடிகின்றது.

V