பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இலக்கியப் பருவ இதழ்கள்

சுவடிப்பதிப்பின் வரலாற்றைத் 'திருக்குறள் மூலபாடம் - நாலடியார் மூலபாடம்" (கி.பி.1812) தொடங்குவதைப்போல் பருவ இதழ்களில் வெளிவந்த சுவடிப்பதிப்பின் வரலாற்றை 'உண்மை விளக்கம் எனும் சித்தாந்த தீபிகை' (1897) எனும் திங்களிதழில் வெளிவந்த 'திருவானைக்கா உலா' (1897) தொடங்குகின்றது. இப்பருவ இதழ் தொடங்கி இன்றுவரை

பல்வேறு பருவ இதழ்கள் சுவடிப்பதிப்புகளை

வெளியிட்டுள்ளன.

சுவடிப் பதிப்புகளை வெளியிட்ட இலக்கியப் பருவ இதழ்களை வெளியீட்டு நிலையில் ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை, தனியார் பருவ இதழ்கள், தமிழ்ச் சங்கப் பருவ இதழ்கள், சுவடி நூலகப் பருவ இதழ்கள், ஆதீனப் பருவ இதழ்கள், நிறுவனப் பருவ இதழ்கள், பல்கலைக்கழகப் பருவ இதழ்கள் போன்றன வாகும்.

1. தனியார் பருவ இதழ்கள்

சுவடிப்பதிப்புகள் வெளிவரத் தொடங்கிய 19ஆம் நூற்றாண்டில் தனியார் சுவடிப்பதிப்புகளே மிகுதியும் வெளிவந்திருக்கின்றன. 19ஆம் நூற்றாண்டில் சுவடிப்பதிப்புகளை வெளியிடுவதற்கான அச்சுக்கூடங்கள் மிகுதியாகத் தோன்றியுள்ளன. இவ் அச்சுக்கூடங்கள் வாயிலாகத் தனியார் சுவடிப்பதிப்புகள் பல வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக, மாசத் தினச் சரிதையின் அச்சுக்கூடம், ராவானா அச்சுக்கூடம், கல்வி விளக்க அச்சுக்கூடம், சரஸ்வதி அச்சுக்கூடம், அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடம், ரிக்கார்ட் அச்சுக்கூடம், பரப்பிரம்ம முத்திராசாலை, முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், இலக்ஷ்மி