பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

49

விலாச அச்சுக்கூடம், கலாரத்னாகரம் அச்சுக்கூடம், மினர்வா பதிப்பகம், சென்னை கல்விச்சங்கத்து அச்சுக்கூடம், திராவிட தீபிகை அச்சுக்கூடம், இலக்கணக் களஞ்சியம் பிரஸ், ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடம், வித்வரக்ஷாமிர்த அச்சுக்கூடம், மெஞ்ஞான விளக்க அச்சுக்கூடம், அல்பீனியன் அச்சுக்கூடம், வித்தியாநுபாலன யந்திரசாலை, செங்கல்வராய நாயக்கர் அனாதை விடுதி அச்சகம் போன்ற அச்சுக்கூடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1

இவ்வாறான அச்சுக்கூடங்கள்தான் 19ஆம் நூற்றாண்டின் சுவடிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளன. சில அச்சுக்கூடங்கள் இதழ்களையும் வெளியிட்டுள்ளன. இதழ்களின் பெயரிலேயே அச்சுக்கூடங்களின் பெயரும் இருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக, மாசத் தினச்சரிதையின் அச்சுக்கூடம், சுதேசாபிமானி அச்சுக்கூடம், பூர்ண சந்திரோதய அச்சுக்கூடம், தேசாபிமானி அச்சுக்கூடம், மீனலோசனி அச்சுக்கூடம், விவேக சந்திரோதய அச்சுக்கூடம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆக, 19ஆம் நூற்றாண்டில் இருந்த அச்சுக்கூடங்கள் சுவடிப்பதிப்பு களையும் இதழ்களையும் வெளியிடுவதைத் தம்முடைய இரு கண்களாகப் போற்றி வந்தன என்பது தெரிகிறது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த உண்மை விளக்கம் எனும் சித்தாந்த தீபிகை (1897), ஞானபோதினி (1897), விவேகபாநு (1900) ஆகிய மூன்று தனியார் இதழ்கள்தான் சுவடிப்பதிப்புகளை வெளியிடும் முறையை அறிமுகப்படுத்தின. இவற்றைத் தொடர்ந்து பைந்தமிழ் (1923), பஞ்சாமிர்தம் (1924), ஹரிசமய திவாகரன் (1924), செல்வக் களஞ்சியம் (1926), சிவநேசன் (1927), கலாநிலையம் (1928), தேனோலை (1974), புலமை (1975) போன்ற பதினொரு தனியார் பருவ இதழ்களும் சுவடிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளன.

உண்மை விளக்கம் எனும் சித்தாந்த தீபிகை

'உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை' எனும் திங்களிதழ் திரு. நாகரத்தினம் அவர்களை ஆசிரியராகக்