பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

கொண்டு சென்னையிலிருந்து 1897ஆம் ஆண்டு சூன் திங்கள் முதல் வெளிவந்துள்ளது. இது, 'சமய ஞானம், தத்துவ ஞானம், கலை ஞானம், பூதபௌதிக முதலிய சாஸ்திர ஞானம் இவற்றைப் பற்றி விவகரிக்கும் மாதாந்திரப் பத்திரிகை' என இதன் தலைப்புப் பகுதியில் இடம்பெறுள்ளது. 1897ஆம் ஆண்டு சூலை இதழ் 'உண்மை விளக்கம் எனும் சித்தாந்த தீபிகை' எனுப் பெயரில் சிறுமாற்றம் பெற்று வெளிவந்துள்ளது. 1897ஆம் ஆண்டு சூன் இதழ் மட்டும் 'உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை' என வெளிவந்து இருக்கின்றது.

இவ்விதழ் முதல் நான்கு ஆண்டுகள் தமிழிலும் பிறகு ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கின்றது. இவ்விதழில் சிவஞான சித்தியார், தாயுமானவர் அருளிச்செய்த பாடல்கள், திருமந்திரம், பதார்த்த தீபிகை போன்ற நூல்களும் அதற்கான உரைகளும் வெளிவந்துள்ளன. இவையல்லாமல் 'திருவானைக்கா உலா' எனும் சுவடிப்பதிப்பும் இவ்விதழில் வெளிவந்துள்ளது. 'உண்மை விளக்கம் எனும் சித்தாந்த தீபிகை' என்ற பெயரில் 1872ஆம் ஆண்டு ஓர் இதழ் சென்னையிலிருந்து வெளிவந் திருப்பதும் தெரிகிறது. இவ்விதழ் இதனினின்றும் வேறானது. ஞானபோதினி

'ஞானபோதினி' எனும் திங்களிதழ் மு.சி. பூர்ணலிங்கம் பிள்ளை அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வெளிவந்துள்ளது. ஆறாம் ஸம்புடம் (தொகுதி) முதற்கொண்டு மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளையோடு வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியும் இணை யாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவ்விதழில் தமிழ்ச்சரிதம், இலக்கணம், பொருணூல், உடல் நூல், வைத்தியம், தத்துவம், கானம், நாடகம், கல்வி, சமயம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும், இக்காலப் புலவர்களின் கவிதைகள், பழந்தமிழ் நூல்கள், நூல்