பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

51

மதிப்புரைகள், ஆராய்ச்சித் தொடர்புக் கட்டுரைகள், தமிழிலக்கிய நூல்களின் வசனப் பகுதிகள் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. இவ்விதழில் 'குலோத்துங்க சோழன் கோவை, திருப்பரங்கிரிக் குமரனூசல், திருப்பரங்கிரிக் குமரன் தாலாட்டு, தோத்திர வெண்பா' ஆகிய நான்கு சுவடிப்பதிப்புகள் வெளிவந்து இருக்கின்றன.

விவேகபாநு

'விவேகபாநு' எனும் திங்களிதழ் வள்ளிநாயக சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு திருநெல்வேலியிலிருந்து 1900ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வெளிவந்துள்ளது. அறிவு, உலகப்பற்று, பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றைத் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு ஊட்டும் முக்கிய நோக்கத்தோடு இவ்விதழ் தோற்றுவிக்கப்பெற்றுள்ளது.

இவ்விதழின் நோக்கத்தை வள்ளிநாயக சுவாமி, "விவேகத்தை ஜனங்களுக்குப் போதிப்பதற்கு மார்க்கங்கள் பலவுளவேனும் அவற்றுளெல்லாம் சிறந்தது பத்திரிகையே என்பது துணிவு. ஏனென்றால் இது எத்திறத்தாருக்கும் பக்குவ முதலியது கவனியாமல் தூர சமீபத்தை நோக்காமல் ஞானத்தை உபதேசிக்கின்றது. ஆதலின், லௌகிகத்திற்கும் வைதிகத்திற்கும் அவசியமான ஒழுக்கங்களையெடுத்துப் போதிக்கும் பத்திரிகையொன்றேனும் தற்காலத்தில் பிரசுரிக்கப்பட்டு வராத நமது ஜில்லாவில், அத்தகைய பத்திரிகையொன்று வெளிப்படுத்த அதிக விருப்பமுற்றிருந்த எமக்கு, அதைக் கொண்டு முடிக்கும் சக்தி சிறிதுமின்றாயினும், சில அறிஞர்கள் விஷயதானம் செய்வதாய் வாக்களித்து எமக்கு ஊக்கத்தை உண்டு பண்ணினமையின், இப்பத்திரிகையைப் பிரசுரம் செய்து ஒருவாறு துணிந்தனம்" (விவேகபாநு, 1:1:1900, ப.1) என்றார்.

இவ் உன்னத நோக்கத்தோடு தோற்றுவிக்கப்பெற்ற இவ்விதழ் முதலர்ண்டு இதழ்ப் பகுதியோடு நின்றுவிட, பின்னர் ஓராண்டு கழித்து மு.ரா. கந்தசாமிக் கவிராயர்