பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

அவர்கள் இவ்விதழ் உரிமையைப் பெற்று வெளியிட த் தொடங்கியிருக்கின்றார். இதனை மு.ரா. கந்தசாமிக் கவிராயர், "இவ்விவேகபாநு என்ற மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகையானது தூத்துக்குடி ஸ்ரீமத் வள்ளிநாயக சுவாமிகளால் 1900ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கி ஒரு வருஷ காலம் மிகவும் சிறப்புடன் நடாத்தப்பெற்றது. தற்காலத்தில் தன்னிகரில்லாத் தலைமைப் புலமை வாய்ந்த ஸ்ரீமான் உ.வே. சாமிநாதைய ரவர்கள் முதலான பண்டித சிகாமணிகளால் கொண்டாடப் பெற்றதும் யாவருமறிந்த விஷயமே.

இங்ஙனஞ் சிறந்து நிகழ்ந்த இதனை இத்தமிழ் நாட்டின் தவக்குறைவால் சிற்சில அசௌகரியங்களைக் கருதி ஸ்ரீமத் வள்ளிநாயக சுவாமிகள் சிலகாலம் நிறுத்தி வேறு யாரேனும் நடத்துவராயின் இதன் முழுச் சுதந்திரங்களையும் கொடுத்துத் தாமுமியன்றவரை யுதவிபுரிவதாக என்பாலும் என் நண்பர்கள் பாலும் தெரிவித்தார்கள்.

இதனை மீண்டும் நடத்தவேண்டுமென்ற பெரு விருப்பத்தால் இதன் சுதந்திரங்களைப் பெற்றுக்கொண்டு சரிவர நடத்தி வருவதாக மேற்படி சுவாமிகளிடம் நான் தெரிவித்தேன். சுவாமிகள் அகமகிழ்ந்து ஆசி கூறி 'விவேகபாநு'வின் சகல சுதந்திரங்களையும் எனக்குக் கொடுத்தருளினார்கள்" (விவேக பாநு, 2:1:1902, ப.1) என்றார்.

இவ்விதழில் காரியார் நாரியார் பாப்பகுந்துகொண்ட திருவிளையாடல், திருஉருமாமலைச் சிலேடை வெண்பா, நீதிமொழி, பகவத் கீதைக்கும்மி, பதிபசுபாசத் தொகை, புலிமுலை புல்வாய்க்கருளின திருவிளையாடல், மூர்த்தி நாயனார்க்கரசளித்த திருவிளையாடல் ஆகிய ஏழு சுவடிப் பதிப்புகள் வெளிவந்துள்ளன.

பைந்தமிழ்

'பைந்தமிழ்' எனும் திங்களிதழ் ஜகதீச ஐயரை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து 1923ஆம் ஆண்டு சனவரி முதல் வெளிவந்துள்ளது.