பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

53

தமிழ்மொழியின் மேன்மையை விளக்கும் கட்டுரைகள், நூல்கள், நீதிநூற் கருத்துக்கள் போன்றவை இவ்விதழில் வெளிவந்துள்ளன. மேலும், நீதிவெண்பா என்ற சுவடிப் பதிப்பையும் வெளியிட்டுள்ளது.

பஞ்சாமிர்தம்

'பஞ்சாமிர்தம் எனும் திங்களிதழ் அ. மாதவையாவை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து 1924ஆம் ஆண்டு முதல் வெளிவந்துள்ளது. சாக்ரடீஸ், அரசியல், குட்டிக்கதை, சர்வ சமய சமரசதர்சனி கவிதை, கூட்டுறவு இயக்கம், மொழிபெயர்ப்பு, மதிப்புரை, பலதுறைப் பொறுக்கு மணிகள், தொடர்கதை முதலியன இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. தமிழ்ப் பண்பாட்டையும் வாழ்க்கை முறைகளையும் எடுத்துக் கூறும் இதழ்கள் தமிழில் இல்லை என்ற நிலையைப் போக்கவும்; பிற மாநிலம் மற்றும் அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆங்கிலம் அறிந்து தமிழறியா நிலையில், தாய்மொழி பயில ஆர்வம் கொண்டவர்களின் ஆசையைப் போக்கவும்; நாடெங்கும் தேசிய உணர்ச்சியை ஊட்டவும்; நாளிதழ் படிக்க இயலாதவர்கள் அத்திங்கள் நிகழ்ச்சிகளை ஒட்டுமொத்தமாக அறிந்துகொள்ளவும்; உண்மை, அன்பு, அறிவு, ஒற்றுமை, உழைப்பு எனும் ஐந்தும் கலந்த பஞ்சாமிர்த மாகவும் இவ்விதழ் வெளிவந்திருக்கிறது. இதனை இவ்விதழின் ஆசிரியர் அ. மாதவையா, "தமிழிலே மாதப் பத்திரிகைகள் பல வெளிவருகின்றன; எனினும், இவை பெரும்பாலும் ஒரு சில விஷயங்களையே கையாளுகின்றன. நமது நாகரிக வாழ்க்கைக்குரிய பல துறைகளையும் தழுவி நடைபெறும் மாதப் பத்திரிகை, நான் அறிந்தவரை, ஒன்றேனும் தமிழில் இல்லை. இங்கிலீஷில் பலவும், வங்காளி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு முதலிய மொழிகளில் சிலவும் இத்தகைய பத்திரிகைகள் உள. மற்று எவ்விதத்திலும் இந்த பாஷை களுக்குத் தாழாததும், இவை யாவற்றிலும் மேலான பழம்புகழ் படைத்ததுமான நமது அருமைத் தாய்மொழிக்கு உள்ள இக்குறையை நிரப்புவது என்னினும் மிக்க அறிவும் படிப்பும்