பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

உள்ளவர் பணியாயினும், வேறு எவரும் முன்வராமை யினால் நாட்டுப் பற்றும் பாஷாபிமானமும் உள்ள தமிழ் மக்களின் உதவியைக் கொண்டு உழைத்துப் பார்க்க துணிந்து, நான் முன் வரலானேன்.

உண்மை, அன்பு, அறிவு, ஒற்றுமை, உழைப்பு

என்னும் ஐந்தையும் கலந்ததாகும் இப்பஞ்சாமிர்தம். தமிழ் நாட்டிலும், தமிழ் மக்கள் குடியேறியுள்ள பிற நாடுகளிலும் ஆங்கிலம் ஆண்மக்கள் பலர்க்கும், மாதர் சிறுவர் சிறுமி களுக்கும், ஆங்கிலம் அறிந்தும் தமிழ்த்தாயைக் கைவிடாத சிலர்க்கும், நெடுநாளாய்த் தாம் புறக்கணித்து வந்த தாய்மொழியை மீண்டும் பயில ஆசை கொண்டுள்ளார் களுக்கும் தினசரி பத்திரிகைகளை வாங்கிப் படிக்கப் பணம் இல்லாதவர்க்கும் உரித்தாகும். நாடெங்கும் ஆங்கு ஆங்கு முளைத்தெழுந்த தேசிய உணர்ச்சிப் பயிருக்கு இப்பத்திரிகை மூலமாய் உரம் இட்டு, அறிவுநீர் பாய்ச்சி, இவ்வுணர்ச்சியைத் தழைத்தோங்கச் செய்ய முயலுவது என் முக்கிய நோக்கம்" (பஞ்சாமிர்தம், 1:1:1924) என்றார்.

இம்முக்கிய நோக்கங்களுடன் சில சுவடிப்பதிப்பு களையும் இவ்விதழ் வெளியிட்டுள்ளது. பார்வையிட்ட முதலிரண்டு இதழ்களில் கலியுகமாலை, தனிப்பாடற்றிரட்டு ஆகிய இரண்டு சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. ஹரிசமய திவாகரன்

பண்டித அரங்க ராமாநுஜத்தை ஆசிரியராகக் கொண்டு 'ஹரிசமய திவாகரன்' எனும் திங்களிதழ் மதுரையி லிருந்து 1924ஆம் ஆண்டு தை முதல் வெளிவந்து உள்ளது. மதம் தொடர்பான கண்டனங்களும், தெய்வ நம்பிக்கையை வெறுக்கும் செய்திகளும் இடம்பெறாத ஹரிசமய திவாகரனில் ஆழ்வார்கள் அருளிய பாடல்களின் ஆழ்பொருள்கள், ஆசாரியர் களின் கால ஆராய்ச்சிகள், இராமாயணம், பாரதம், பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றிலுள்ள நீதிகள், அச்சிடப்பெறாத நூல்கள், அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு வகைப்