பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

55

பொருள்கள், அகப்பொருள் விரவி வரப்பெற்ற பாடல்களுக்குப் பூர்வாசிரியர்களும் தமிழறிஞர்களும் கொண்ட பொருள்களின் ஒற்றுமை வேற்றுமைகள், வாழ்க்கை நன்முறையில் அமையக் கடைப்பிடிக்க வேண்டிய பொதுநீதிகள் ஆகியன வெளிவந் திருக்கின்றன.

....

இதனைப் பண்டித அரங்க ராமாநுஜம், "இப் பத்திரிகையில் மத தூஷணங்களும் தெய்வ நிந்தைகளும் வெறுக்கத் தக்க விஷயங்களும் சாஸ்திர விரோதமானவைகளும் வீண் வேடிக்கை உண்டுபண்ணத்தக்கவைகளும் எழுதப் பெறாவாம். தக்க வித்வான்களால் சுருதி, ஸ்மிருதி, இதிஹாஸ, புராண விஷயங்களின் ஆழ்பொருள் ஆசார்யர்க ளருளின ப்ரபந்த ரஹஸ்ய வ்யாக்யானங்களின் ஆழ்பொருள் களும், ஆசார்யர்களின் காலவாராய்ச்சியின் சீர்திருத்தங்களும், நுண்ணிய சில ஆராய்ச்சிகளும், ஸ்ரீராமாயண, பாரத, பாகவத, விஷ்ணு புராண, பகவத்கீதை முதலியவற்றிற் கண்ட நீதிகளும் உபாக்யானங்களும் தர்ம சாஸ்திரங்களும் அச்சிடப்பெறாத சில அரிய நூல்களும், அச்சிடப்பெற்ற நூல்களிற் கண்ட அச்சுப் பிழையின் சீர்திருத்தங்களும், அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகை உறுதிப் பொருள்களும், சம்பிர தாயத்தைப் பற்றிய தமிழ் நூல்களும், வருணாச்சரம தர்ம முறைகளும், வ்யாக்கியானங்களிற் கண்ட தமிழ் பிரமான நூல் விளக்கமும் வைஷ்ணவாச்சாரமும், ஆசார்யசிஷ்ய லக்ஷணங் களும், தத்வ இயல்புகளும், அகப்பொருள் விரவி வரப்பட்ட பாடல்களுக்குப் பூர்வாசார்யர்களும் தமிழறிஞர்களும் கொண்ட பொருள்களின் ஒற்றுமை வேற்றுமை நயங்களும், கம்பராமாயண, வில்லிபாரதங்களிற் கண்ட அரிய விஷயங் களும், பூர்வாசார்யர்கள் இன்ன வழியாய் சம்பிரதாயத்தை விர்த்தி செய்து வந்தார்களென்பதும், விதிவாக்கியங்களையும், பிரஸ்துத ப்ரசம்ஸாபரமான வாக்கியங்களையும் பகுத்தறியு முறையும் சாஸ்திரங்களின் அர்த்த நிர்ணயம் செய்யும் வகையும், நன்முறையைக் கைக்கொள்ளும் உபாயங்களும் பொது விஷயங்களும் இதில் எழுதப்பெறும்" (ஹரிசமய திவாகரன்,1:1:1924, பக்.1-2) என்றார்.