பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

இவ்விதழில் இராமசெயம் (இராமாயணத் திருப்புகழ்), எதிராசரந்தாதி, கண்ணிநுண் சிறுதாம்பு ஆகிய மூன்று சுவடிப்பதிப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.

செல்வக்களஞ்சியம்

'செல்வக்களஞ்சியம்' எனும் திங்களிதழ் ஆர்.எஸ். பதியை ஆசிரியராகக் கொண்டு மதுரையிலிருந்து 1926ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல் வெளிவந்துள்ளது. மேலைநாடு போல, தமிழ்நாடும் தொழில் வளத்தில் சிறந்து விளங்கத்தக்க முறையில் மேலைநாட்டுத் தொழில் முறைகளை அறிமுகப் படுத்துவது; உழவுத் தொழிலையும் நெசவுத் தொழிலையும் மேம்படுத்தும் முறைகளை ஆராய்ந்து வெளிப்படுத்துவது; நோயின்றி வாழும் சிறந்த சித்த வைத்திய முறைகளை எடுத்துரைப்பது; தமிழ் மக்களின் அறிவுத் திறனை மேலை நாட்டார்க்கு ஈடாகக் கொணர்வதற்கான வழிமுறைகளை ஆராய்வது; உணவுப் பொருள்களின் தேவையையும் அவற்றின் இன்றியமையாமையையும் எடுத்துரைப்பது போன்ற முக்கிய நோக்கங்களுடன் இவ்விதழ் வெளிவந்திருக்கின்றது.

இவை

இதனை இவ்விதழின் ஆசிரியர், "உடல்நலம் பேணு வதற்குரிய வழிகள், சித்த வைத்திய முறைகள், நோய்வராது காத்துக்கொள்ளும் பற்பல வழிகளின் நுட்பங்கள், உணவுப் பொருள்களின் உயர்வு தாழ்வுகள், பல்வகைக் கல்விப் பேறுகள் முதலிய பொருள்களின் உயர்வு தாழ்வுகள் முதலியவற்றைக் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் கற்பிக்கும். யாவற்றிற்கும் மேலாகப் பற்பல நூதனக் கைத்தொழில் களையும், மேல்நாட்டுப் பெருமுயற்சிகளையும், நமது தேசத்து மக்கள் கற்றுத்தேர்ந்த நமது நாட்டிற் பல பெரிய நூதனத் தொழிற்சாலைகளை அமைத்து ஏராளமான புதுப்பொருள் களை இயந்திரத் துணையாற் செய்து குவித்து பெருத்த வாணிகம் நடத்திச் செல்வப்பெருக்கும் செழிப்பும் பெறுமாறு தகுந்த அறிவு புகட்டும். இந்தியாவில் இப்பொழுது சிறந்து விளங்குகின்ற உழவுத் தொழிலையும், இதற்கு முன் முதன்மை

+