பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

57

பெற்றிருந்த நெசவுத் தொழிலையும் இன்னும் அதிக நன்றாகச் செய்யும் முறைகளையும் ஆராய்ந்து அறிந்து வெளிப்படுத்தும்.

நாட்டைத் திருத்துவதற்குரிய அறிவும் கடமையும் வாய்க்கப்பெற்றிருக்கும் புலவர் பெருமான்களும், திறமை வாய்ந்த வைத்தியர்களும், மேல்நாட்டுத் தொழில்முறை நூலாராய்ச்சிக்காரர்களும் உலகத்தவர்க்கு உயர்தரமான உண்மைப் பொருள்களை எடுத்துப் புகட்ட விரும்புவாரும், நமது தமிழ் மக்கள் சோம்பல் என்னும் தூக்கத்தினின்றும் விழித்து மேல் நாட்டு மக்களைப் போலச் சுறுசுறுப்பான தொழிலாளிகளாகவும் முதலாளிகளாகவும் முன்னேற்றமடையும் வகை வழிகளைப் பற்றித் தெளிவு பெற உணர்ந்தவர்களும் தங்கள் தங்கள் அனுபவங்களை இச் செல்வக்களஞ்சியத்தின் வாயிலாக அறிவித்துத் தமிழ் நாட்டவருக்குத் துணைபுரிந்து வருவார்களாக" (செல்வக் களஞ்சியம், 1:1:1926, ப.3) என்றார்.

ஆக, செல்வக்களஞ்சியம் தமிழ்நாடு தொழில் துறையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டது என்பது தெரிகிறது. என்றாலும் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் போக்கும் இவ்விதழிற்கு இருந்திருக்கின்றது. இவ்வகையில், 'திருக்குறள் அதிகார சாரமாகிய திருத்தாலாட்டு” எனும் நூல் முதல் தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிவநேசன்

'சிவநேசன்' எனும் திங்களிதழ் இராம.கு.இராம. இராம சாமி செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு பலவான்குடியி லிருந்து 1927ஆம் ஆண்டு ஆவணி முதல் வெளிவந்துள்ளது. சைவம் தழைத்தோங்கச் செய்யும் வழிமுறைகள், சைவ சமயம் தொடர்பான கட்டுரைகள், நூலாய்வுகள், நூல் தொடர்பான கருத்துமேடை, நூல் அறிமுகம், அச்சிடப்பெறாத நூல்கள், மதிப்புரைகள் போன்றன இவ்விதழில் வெளிவந்திருக்கின்றன.

இவ்விதழில் சங்கரலிங்க உலா, திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, திருமயிலை யமகவந்தாதி, தேவிகாலோத்ர