பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

-

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

ஆகமம் தமிழ் மூலமும் சித்தாந்த ரத்ந விருத்தி எனும் உரையும், பழமலைக் கோவை ஆகிய ஐந்து சுவடிப் பதிப்புகள் வெளிவந்துள்ளன.

கலாநிலையம்

'கலாநிலையம்' எனும் வார இதழ் டி.என். சேஷாசலத்தை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து 1928ஆம் ஆண்டு சனவரி முதல் வாரம் (வியாழக்கிழமை) வெளிவந்துள்ளது. ஓராண்டில் உள்ள 52 வியாழக்கிழமைகளில் 26வது மற்றும் 52வது வியாழக்கிழமை கலாநிலையத்திற்கு விடுமுறை நாளாகும். ஆகவே, முதல் 25 வாரப் பகுதிகள் ஒரு கட்டடமாகவும், அடுத்த 25 வாரப் பகுதிகள் மற்றொரு கட்டடமாகவும் என ஆண்டிற்கு இரண்டு கட்டடங்களாக வெளிவந்துள்ளன. என்றாலும் இரண்டு கட்டடங்களும் முறையான தொடர் எண்ணைப் பெற்று ஒரே தொகுதியாக அமைந்துள்ளது.

"

இலக்கியச் செறிவு மிகுந்த இலக்கியங்களை எளிய வரும் எளிதில் புரிந்து தெளியும் வண்ணம், மாணவர் வினா எழுப்புவது போலவும், அதற்கு ஆசிரியர் விடையளிப்பது போலவுமான நடையில் 'தமிழ்ப்பாடம்' என்ற பகுதி வெளி யிடுவது; தமிழ் இலக்கிய இலக்கணங்களில் தேர்ச்சி பெற்றுப் பல்வேறு இடங்களிலுள்ள அறிஞர்களின் கருத்துக்கள் மற்றவர்க்கும் பயன்படும் முறையில் வெளியிடுவது; தமிழே தமதுயிர் என்றெண்ணி வாழ்ந்து வரும் தமிழ்ப் புலவர்களுக் காகச் சிறந்த ஆங்கிலப் புவவர்களின் நயமான பகுதிகளை மொழிபெயர்த்து வெளியிடுவது; அரசியல், சமூக சீர்த்திருத்தம் போன்றவற்றில் ஈடுபடாமல் முற்றிலும் இலக்கிய இதழாகவே அமைவது போன்ற முக்கிய நோக்கங்களுடன் கலாநிலையம் வெளிவந்திருக்கிறது. இதனை டி.என். சேஷாசலம், "கம்பர் போன்ற தமிழ்க் கவிகளின் அழகையும் நயத்தையும் கேள்வி யுற்றுத் தாமும் அக்கவிகளைப் படித்து அனுபவிக்க வேண்டும் எனும் விருப்பு இக்காலம் எல்லோர் மனத்திலும் தோன்றியிருக்