பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

59

கின்றது. எனினும், பழக்கக் குறைவினால் எடுத்த புத்தகத்தைப் படித்துப் பொருள் புரிந்துகொள்ள முடியாமல் பலர் மனம் சோர்ந்து சும்மா இருந்துவிடுகின்றனர். ஆர்வம் இருந்தும் அவரது ஆசையை நிறைவேற்றிவைக்கத் தகுந்த சாதனங்கள் இல்லாத படியினால் ஊக்கம் தர்ச்சியடைவது இயல்பே. இப்படிப்பட்டவர் இலக்கிய இன்பம் அனுபவிப்பதற்கு வேண்டிய அளவு தமிழ்ப் பயிற்சி பெறுவதற்கு உதவியாய் இப்பத்திரிகையில் 'தமிழ்ப் பாடம்' என்னும் தலைப்பின் கீழ் வாரந்தோறும் பாடங்கள் ஓதி வருவோம். இந்த முறையில் தொடர்ச்சியாய்ச் சிறிது கவனத்தோடும் படித்து வருபவர் எவர்க்கும் இரண்டொரு வருடங்களில் கம்பராமாயணம், சிந்தாமணி போன்ற நூல்களும் எளிதில் பொருள் விளங்காமற் போகா என்பது நிச்சயம்.

தமிழ் இலக்கிய இலக்கணங்களில் மிக்க தேர்ச்சி பெற்ற அறிஞர் பற்பலர் இந்நாட்டில் பலவிடங்களில் இருக்கின்றனர். அவர்களுள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இன்றி அவரவர் ஆய்ந்து உணர்ந்த அரும்பொருள்கள் மற்றவர்க்கு எட்டாமல் போக நேர்வது இக்காலத் தமிழின் நிலைக்கு உள்ள ஒரு பெரும் குறை. சுவைப்பொருளை உண்போர் யாவரும் விருந்தோடு உண்ண வேண்டுவர். கவிகளில் அவரவர் கண்ட நயமும் பயனும், கூறுவோர் கேட்போர் இருவர்க்கும் இன்பம் அளிக்கும் தன்மையன. ஆதலால், அனையவர் அனைவரும் தம்முடன் அளவளாவி மகிழ்வதற்கு இப்பத்திரிகை புதியதோர் தூதுமாய் உலவும்.

அல்லாது, தமிழ்மொழி இளைத்திடாமல் இதுகாறும் நிலை நின்று வருவதற்கு ஆதாரமாய் நமது தமிழ்ப் பண்டிதர் களுக்கும், முன்னுரைத்த தூதன்றி இன்னுமொன்று யாம் செய்யக் கடமைப்பட்டுள்ளோம். இவர்களில் ஆங்கிலப் பயிற்சி இல்லாதவர் அம்மொழியில் எழுதியுள்ள பெரும்புலவர்களது திறமையும் அறிவும் அவர் கண்ட வாய்மையும் உணர்ந்து கொள்ள இயலாதவராயிருக்கின்றனர். இந்தக் குறையை ஒரு சிறிது தவிர்ப்பதற்கு எண்ணி, ஆங்கிலப்