பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

பேராசிரியர்களின் நூல்களின் நயமான பாகங்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தும் விளக்கியும் இப்பத்திரிகையில் எழுதிவருவோம்.

நினைத்த கருமங்களுக்கு ஏற்ப இப்பத்திரிகையில் வெளிவரும் விஷயங்களை மூன்று வகைகளாய்ப் பிரித்தோம். எனினும், எல்லாம் யாவர்க்கும் படிக்கப் பயனும் சுவையும் உடையனவாகவே இருக்கும். நவீன கதையுமொன்று நல்ல நடையில் சுவையும் அமைப்பும் பிறழாமல் தொடர்ந்து வரக் காண்பீர்.

அரசியல் முறைகளின் குணாக்குணங்களைப் பற்றி வாதிக்க இப்பத்திரிகை நினைத்ததில்லை. மதாசார குலாசார தேசாசார சீர்திருத்த வழக்குகளுக்குக் கலாநிலையத்தில் இடம் இராது" (கலாநிலையம், 1:1:1928, ப.1) என்றார்.

இந்நோக்கங்களிலிருந்து சிறிதும் மாறுபடாத இவ்விதழில் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், விவாதங்கள், இலக்கிய நூல்கள், உரைகள், தமிழ்ப் பாடம், மொழிபெயர்ப்புகள், சுவடிப்பதிப்புக்கள் போன்றன வெளிவந்துள்ளன. இலக்கிய நூல்களில் ஏற்கெனவே வெளிவந்த நூல்களுக்கு உரைகளும், புதியதாகச் சுவடியில் இருந்து அறிமுகப்படுத்தும் நூல்களுக்கு மூலமும் வெளிவந்துள்ளன. இவ்விதழ் 25.7.1935 வரையே வெளிவந்துள்ளது.

இவ்விதழில் அண்டபுராணம், கலைமகளந்தாதி, களவியற்றுறை விளக்கம், திருவிளையாடற் கருணைத்திரு விருத்தம், தினகர வெண்பா, பொதிகை நிகண்டு 1&2, மதுரைக் கோவை, மாறன் பாப்பாவினம், ஸ்ரீவைகுந்தநாதர் பிள்ளைத்தமிழ் ஆகிய பத்துச் சுவடிப்பதிப்புகள் வெளிவந் திருக்கின்றன.

தேனோலை

'தேனோலை' எனும் காலாண்டிதழ் கொடுமுடி சண்முகப்பிரகதத்தை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து 1974ஆம் ஆண்டு ஜூலை முதல் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு