பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

61

காலாண்டிதழும் தொடரெண் பெற்றுள்ளது. பழஞ்சுவடிகளில் காணப்படக்கூடிய பட்டயங்கள், பட்டாக்கள், நூல்கள் எனப் பல நிலைகளில் இவ்விதழ் வெளிவந்துள்ளது.

இவ்விதழில் திருநீலகண்டர் பள்ளு, பூர்வச்சக்கரவர்த்தி நாடகம், மெச்சும்பெருமாள் பாண்டியன் கதை ஆகிய மூன்று சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

புலமை

.

'புலமை' எனும் காலாண்டிதழ் திரு.கந்தசாமியை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து 1975ஆம் ஆண்டு சனவரி முதல் வெளிவந்துகொண்டிருக்கின்றது. முதல் ஒன்பது இதழ்கள் காலாண்டிதழாகவும் அதற்கடுத்த இதழிலிருந்து அரையாண்டிதழாகவும் வெளிவந்துகொண்டு இருக்கின்றது. இதில் இலக்கணம், மொழியியல், சங்க இலக்கியம், காப்பியம், வரலாறு போன்ற பல்தமிழ்த் துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவருகின்றன. ஒவ்வோர் ஆய்வுக் கட்டுரையும் நூல் வடிவம் பெறுதற்குரிய அருமை வாய்ந்தவை. கலப்பு மொழியாக இல்லாமல் கட்டுரைகள் தமிழாகவும் உயர்ந்த நடையமைப்பும் கொண்டுள்ளன. இவ்விதழ், ஆய்வுப் பொருளுக்கும் நடைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது எனலாம்.

ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கே முதன்மை தந்து கொண்டிருக்கும் இவ்விதழில் 'இலக்கண தீபம்' எனும் சுவடிப் பதிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2. தமிழ்ச்சங்கப் பருவ இதழ்கள்

-

முத்தமிழ் வளர்த்த மூவேந்தர்களுள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தனிப்பெருமை பாண்டியரையே சாரும். முதல் - இடை கடைச் சங்கங்கள் மூன்றும் பாண்டிய நாட்டிலேயே தோன்றி மறைந்தன என்பர். முச்சங்கங்கள் இருந்ததை இலக்கிய இலக்கண நூல்கள் சுட்டுகின்றன. திருநாவுக்கரசர் தேவாரம்,