பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

“நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நல்கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண்" (தேவாரம், 6:76:3)

என்பதால் முதற் சங்கம் இருந்ததை அறியமுடிகிறது. மேலும், இறையனார் அகப்பொருள் நக்கீரர் உரையால் சங்கம் பற்றிய முழு விவரத்தை அறியமுடிகிறது. அதாவது, தலைச்சங்கம் கடல்கொள்ளப்பட்ட மதுரையிலும், இடைச்சங்கம் கபாட புரத்திலும், கடைச்சங்கம் உத்தர மதுரையிலும் இருந்தன என்பார் நக்கீரர். மேலும், அவர்தம் உரையால் முச்சங்கங்களும் மூவேறிடங்களில் தோன்றிக் கடல்கோள்களால் அடுத்தடுத்து அழிந்ததையும், ஏறக்குறைய 197 அரசர்கள் காலத்தில் 10,000 ஆண்டுகள் இருந்ததையும் அறியமுடிகிறது (இறையனார் அகப்பொருள் உரை, கழக வெளியீடு, 1976, பக். 5-6).

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1901ஆம் ஆண்டு பொ. பாண்டித்துரைத் தேவரால் மீண்டும் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பெற்றுள்ளது. இதுவே இன்றைய மதுரைத் தமிழ்ச்சங்கம் ஆகும். இதனைத் தொடர்ந்து தமிழர்கள் வாழுமிடமெல்லாம் தமிழ்ச் சங்கங்கள் தோன்றலாயின. இவ்வகையில் தஞ்சை, கரந்தை, சென்னை, திருப்பத்தூர், காரைக்குடி, திண்டுக்கல், திருச்சி, சேலம், கோவை, தருமபுரி, ஊற்றங்கரை, தாரமங்கலம், கரூர் போன்ற தமிழகத் தமிழ்ச் சங்கங்களும்; தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், எர்ணாகுளம், கோட்டயம், திருவனந்தபுரம், கொச்சி, கள்ளிக்கோட்டை, மைசூர், ஜெய்ப்பூர், நாக்பூர், திர்பரோடா, சூரத் போன்ற பிற மாநிலத் தமிழ்ச் சங்கங்களும்; இலண்டன், பெரிலின், நியூயார்க், சிகாகோ போன்ற அயல் நாட்டுத் தமிழ்ச் சங்கங்களும் குறிப்பிடத்தக்கனவாகும்.

இத்தமிழ்ச் சங்கங்கள் தங்களின் தமிழ்ப் பணியைப் பல்வேறு நிலைகளில் செயலாற்றி வருகின்றன. குறிப்பாக, சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தல், தமிழிலக்கிய இலக்கண நூல்களை அச்சிட்டு வெளியிடுதல், பிற