பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

63

மொழியாளர் களுக்குத் தமிழ்மொழியைப் பயிற்றுவித்தல், கருத்தரங்கம், உரையரங்கம், பட்டிமண்டபம், கவியரங்கம் ஆகியவற்றை நடத்துதல், தமிழ் விழாக்கள் நடத்துதல், தமிழ் நூல் நிலையம் அமைத்தல், துறைதோறும் தமிழை வளர்த்தல், தமிழ்த் தேர்வுகள் நடத்திச் சான்றிதழ் வழங்குதல் போன்ற பல தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகின்றன.

இவற்றோடு பழஞ்சுவடிகளிலிருந்து நூல்களைப் பதிப்பிக்கும் பணியையும் சில தமிழ்ச் சங்கங்கள் செயலாற்றி வந்துள்ளன. இவ்வகையில் மதுரைத் தமிழ்ச்சங்கம் ஐந்திணை ஐம்பது உரையுடன், கனாநூல், வளையாபதிச் செய்யுட்கள், புலவராற்றுப்படை, இனியது நாற்பது உரையுடன், நேமிநாதம் உரையுடன், திருநூற்றந்தாதி உரையுடன், திணைமாலை நூற்றைம்பது உரையுடன், அநுமான விளக்கம், அட்டாங்க யோகக்குறள், பன்னிருபாட்டியல், நான்மணிக் கடிகை பழைய உரையுடன், முத்தொள்ளாயிரச் செய்யுட்கள், திருச்செந்திற் கலம்பகம், திருவாரூருலா, சுகசந்தர்சன தீபிகை, தேவையுலா, நரிவிருத்தம், சிதம்பரப் பாட்டியல் உரையுடன், திருக்கலம்பகம் உரையுடன், விக்கிரமசோழனுலா, குருமொழி வினாவிடை, கேசவப்பெருமாள் இரட்டைமணிமாலை, திருத்தணிகைத் திருவிருத்தம், மதுரைத் திருப்பணிமாலை, சந்திராலோகம், ஞானாமிர்தக் கட்டளை, பாண்டியம், மநீஷா பஞ்சகம், அகப் பொருள் விளக்கம், திருமந்திரம் நூறு பாட்டுக்குரை,உவமான சங்கிரகம் -1, உவமான சங்கிரகம்-2, மாறனலங்காரம் மூலமும் உரையும், திருப்புல்லாணி மாலை, பழமொழி மூலமும் பழைய உரையும் (முதல் 100 செய்யுள்), திருமாலிருஞ்சோலைமலை அழகர் பிள்ளைத்தமிழ், பொருட்டொகை நிகண்டு, அகராதி நிகண்டு, மேகவிடுதூது, திருக்குற்றால மாலை, தண்டலையார் சதகம், இராமோதந்தம், பழமொழி மூலமும் பழைய உரையும் (2ஆவது 100 செய்யுள்), சேதுநாடும் தமிழும், மதங்க சூளாமணி, கூடற்புராணம், அரும்பொருள் விளக்க நிகண்டு, மாறனகப்பொருளும் திருப்பதிக்கோவையும், பாப்பாவினம் (மாறன் பாப்பாவினம்), மதுரை மும்மணிக்கோவை, பழனிப்