பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

நூலாசிரியரால் ஓலையிலோ காகிதத்திலோ தம்மாலோ பிறராலோ எழுதப்பெற்றது சுவடி. இச்சுவடி நாளடைவில் பல படிநிலைகளில் ஓலை எழுதுவோராலும் எழுதுவிப்போராலும் பல்கிப் பெருகிற்று எனலாம். மூலத்தை மட்டுமோ அல்லது மூலத்துடன் அடிக்குறிப்பு, உரை, கருத்துரை, குறிப்புரை, பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை போன்றவற்றில் ஏதாவதொன்றி னையோ ஒன்றிற்கும் மேற்பட்டவற்றைப் பெற்றோ பதிப்பிக்கப் பெறுவதே 'சுவடிப்பதிப்பு.அதாவது, சுவடிகளை (ஓலை, காகிதம்) அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப் பெறுவன எல்லாம் சுவடிப்பதிப்பு எனலாம்.

நூலாசிரியர் தம்மாலோ பிறராலோ எழுதப்பெறும் ஏடு "மூலவேடு'. சில மூலவேடுகள் தொடக்க காலத்தில் வாய்மொழியாக வழங்கப்பெற்று வாய்மொழியாகவே வளர்ந்து பின்னாளில் சுவடியாக ஏட்டுருவம் பெறுவதுண்டு. இவ்வாறு வாய்மொழியாய் வழங்கி ஏட்டுருவம் பெற்றனவும் "மூலவேடு' எனலாம். மூலவேடு பலருக்குத் தேவைப்படும் போது படியெடுக்கப்பெறுகின்றன. அவற்றைப் 'படியேடுகள்' எனலாம். மூல நூலுக்கு உரையாசிரியரால் மூலமும் உரையுமாகவோ, உரை மட்டும் தனித்தோ எழுதப்பெறுவதை 'உரையேடு' எனலாம். ஒரு நூலுக்குப் படியேடுகள் உரையேடுகள் பல்கிப் பெருகிய பின் ஏடெழுதுவோரால்

வேறுபாடுகள் ஏற்பட்டுவிடுகின்றன. இந்நிலையில், கல்வியிற் சிறந்த ஒருவரால் ஒரு நூல் தொடர்பான மூலவேடு, படியேடு, உரையேடு ஆகியவற்றைத் திரட்டி ஒப்பிட்டுத் திருத்தமான பாடத்துடன் அச்சிடுவதே 'சுவடிப்பதிப்பு' எனலாம். அதாவது, சுவடியிலுள்ளவற்றை இன்றைய